தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது. (நண்பர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதை விட வருத்தமான விசயம். நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதெல்லாம் நினைப்பது எல்லாம் செய்து முடிக்க முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகி வருகிறது.)

-oOo-

கடந்த வாரம் நடிகர் கார்த்திக் அரசியல் கட்சி தொடங்குகிறார். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு வர.. நிறுவனத்தின் சார்பில்.. போய் இறங்கினோம். 4.30க்கு என்று சொல்லி இருந்தார்கள். சினிமா படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது போலவே தாமதமாக 5 மணிக்கு வந்து சேர்ந்தார். தொடக்கத்தில்.. பேசினார்.. பேசினார்… பேசினார்! என்னென்னமொ பேசினார். ஏகப்பட்ட கைத்தடிகளின் கூட்டம் வேறு. அத்தனை பேரும் மப்பில் இருந்தார்கள். தேவர் சாதி கட்சி போல தோற்றம். நிறைய கைதட்டலும் விழுந்துகொண்டே இருந்தது. நிறைய பேசிய பின் “அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி” என்று தம் கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். அதன் பின் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மஞ்சள்+வெள்ளை+சிகப்பு நிறங்களைக் கொண்ட.. கொடியின் நடுவில் முத்துராமலிங்கனார் படம் போட்டிருந்தார்கள். கொடி அறிமுகம் செய்யப்பட்டவுடன் எல்லா புகைப்படக்காரர்களும் கார்த்திக்கின் தலைக்கு மேல்(பின்னால்) பிடித்திருந்த கொடியை படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். விடியோ கேமரா மேன்களும் கார்த்திக்குடன்.. கொடியை கவர் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது.. கார்த்தின் அசராமல்.. சொன்னார்.., “நல்லா.. பார்த்துக்கிடுங்க.. இது தான் கொடி.. ஆனா.. இன்னும் ஃப்பைனலைஸ் ஆகலை..” படம் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும்.. ஒரு மாதிரியாகிவிட்டது. அய்யா சாமீ.. மொதல்ல.. ஒரு முடிவுக்கு வாங்க.. அப்புறம் கூட்டம் போட்டு அறிவிப்பு கொடுங்கப்பா… மக்கள் பாவம்..!

-OoO-

நடிகர் சரத்குமார் தன் கட்சியின் சார்பில்.. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடத்தவிருக்கும்.. ஆர்ப்பாட்டம் பற்றி அறிவிக்க.. அழைத்திருந்த.. செய்தியாளர் சந்திப்பு அது. ”யாருடனாவது.. கூட்டன்ிசேர்வீர்களா?” என்ற கேள்விக்கு, “இன்றைய முதல்வர்.. முந்தைய முதல்வருடன் நிச்சயம் கூட்டனி இல்லை”என்று சொன்னார் சரத். குறும்புக்கார.. ஒரு செய்தியாளர்.. அப்போ.. ”வருங்கால முதல்வருடன் சேருவீர்களா?”என்று அறிவுஜீவித்தனமாக கேட்க.., சரத்குமார் புரியாமல் விளித்தார். “விஜயகாந்துடன் சேர்வீர்களா?”ன்னு கேட்டேன் சார்.. என்றார் அந்த செய்தியாளர். கடுப்பாகிப் போன.. சரத், “நாங்களே.. அடுத்த முதல்வர்ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போது இப்படி பேசுவது சரியா?” என்று நொந்துகொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.

-oOo-
”தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்” என்ற ஓர் அமைப்பை டாக்டர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். அந்த அமைப்பின் அனேக பொறுப்புக்களில் இருப்பவர்கள் எல்லோரும் வன்னியர்கள். இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மற்றவர்கள். சாதிய அமைப்புகள் நேரடியாக சாதி பெயரை பயன்படுத்தாமல் இப்பொதெல்லாம் ‘தமிழ்’ பெயரை பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டது ஆபத்தான காரியமாகப்படுகிறது. எழுத்தாளர்களுக்குள் தான் நேரடியான சாதிய அணுகுமுறை இருப்பதில்லை என்று நம்பி இருந்தேன். அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரியவந்தது. அடப்போங்கப்பா..! 🙁

-oOo-


Comments

14 responses to “விடுபட்டவை 15 ஜூன் 2008”

  1. /”தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்” என்ற ஓர் அமைப்பை டாக்டர் ராமதாஸ் நேற்று தொடங்கி வைத்தார். அந்த அமைப்பின் அனேக பொறுப்புக்களில் இருப்பவர்கள் எல்லோரும் வன்னியர்கள்./

    தல, பிரம்மராஜனும் வன்னியர் அரசியலில் கலந்துவிட்டாரா? அப்படியெனில் (இருக்காது என உளமாற நம்புகிறேன்), இது எவ்வளவு பெரிய சோகம்!

  2. ஏன்யா இப்படி எல்லாரும் ஆகறாங்க. நாகார்ஜூனன் சொன்ன மாதிரி வரலாறு ஒரு குரங்கா ??

  3. //சாதிய அமைப்புகள் நேரடியாக சாதி பெயரை பயன்படுத்தாமல் இப்பொதெல்லாம் ‘தமிழ்’ பெயரை பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டது ஆபத்தான காரியமாகப்படுகிறது.//

    அதிர்ச்சியளிக்கும் உண்மை!.. மிகவும் வருத்தப் படவேண்டிய ஒரு விஷயம்!!!

  4. சாதியை ஒழிக்கவிடமாட்டாங்கப்பா இந்த அரசியல்வியாதிகள்.

    பின்னே ….அவுங்க பொழைப்பு எப்படி நடக்கும்?(-:

  5. \\இப்போதெல்லாம் நினைப்பது எல்லாம் செய்து முடிக்க முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகி வருகிறது\\
    எனக்கும்தான்

  6. முரளிகண்ணன் June 16th, 2008 at 5:42 am
    \\இப்போதெல்லாம் நினைப்பது எல்லாம் செய்து முடிக்க முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகி வருகிறது\\
    எனக்கும்தான்

    ரிப்பீட்டு

  7. //பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது//

    ;-(

  8. //அப்போ.. ”வருங்கால முதல்வருடன் சேருவீர்களா?”என்று அறிவுஜீவித்தனமாக கேட்க.., சரத்குமார் புரியாமல் விளித்தார். “விஜயகாந்துடன் சேர்வீர்களா?”ன்னு கேட்டேன் சார்.. என்றார் அந்த செய்தியாளர். கடுப்பாகிப் போன.. சரத், “நாங்களே.. அடுத்த முதல்வர்ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போது இப்படி பேசுவது சரியா?” என்று நொந்துகொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    //

    ஹா…. ஹா…. :)) படிக்கசொல்லையே செம்ம சோக்க்காகீதுப்பா…

    //எழுத்தாளர்களுக்குள் தான் நேரடியான சாதிய அணுகுமுறை இருப்பதில்லை என்று நம்பி இருந்தேன். //

    :((((

  9. //தொடக்கத்தில்.. பேசினார்.. பேசினார்… பேசினார்! என்னென்னமொ பேசினார்//

    திருத்தம்…”பேஷினார்…பேஷினார்…பேஷினார்…!”

  10. ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

    “கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
    போராளியின் வெற்றிப்பேரிகை”

    http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

    அன்புடன்,
    விஜய்
    கோவை

  11. பாலா…நல்ல பதிவு…உங்க எழுத்து ஸ்டைல் மாறியிருக்கமாதிரி தெரியுது…

    மெச்சூரிட்டியான எழுத்துக்கள்…

    அப்புறம்

    ///////ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

    “கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
    போராளியின் வெற்றிப்பேரிகை”

    http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

    அன்புடன்,
    விஜய்
    கோவை
    //////

    இவருக்கு ஒரு பின்னூட்ட்டம் போட்டுட்டு வந்துருங்க :))

  12. முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்

  13. தூயா Avatar
    தூயா

    வன்னியர் என்றால் என்ன பாலாண்ணா?

  14. //தூயா ..
    வன்னியர் என்றால் என்ன பாலாண்ணா?
    //

    பதிவுலகில் தான் இருக்கியாம்மா.. இதுகூட தெரியாம..?
    தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருக்கும் ஒரு பிரபலமான சாதியின் பெயர் அது.

Leave a Reply to துளசி கோபால் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *