விடுபட்டவை 19 ஜூன் 2008

மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க முடியும். 🙂 அவ்வளவு பெரிய.. முயற்சியில அடியேனின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை என்னும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

-OoO-

மருத்துவர் ராமதாசால் தொடங்கப்பட்ட, வன்னிய ”தமிழ் படைப்பாளிகள் பேரிக்கா”வில் முக்கிய பதவியில் இருந்த ஒரு கவிஞர்.. பலரின் கேள்விக்கனைகளை பொறுக்க மாட்டாமல்.. தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.  கொஞம் தன்மானத்துடன் சிந்திந்த அவருக்கு வாழ்த்துக்கள். இந்த பின்நவினத்துவ படைப்பிலக்கிய புலியின் செயல்.. பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மருத்துவரைய்யாவுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. இந்த மாதம் அவருக்கு ஆகாத மாதம் போலும்..! 🙂 {மறைந்த மூப்பனார் பேசுவதை கவனித்தவர்கள் எல்லோரும் இன்னொரு விசயத்தையும் கவனித்திருப்பார்கள். அது தான் பேரிக்கா.. காங்கிரஸ் பேரியக்கத்திலே… என்று சொல்லுவதற்கு பதில்.. அவர் எப்போதும் பயன்படுத்தும் சொல்.. “காங்கிரஸ் பேரிக்காவிலே..” } அது தான் மேலே சொன்னா பேரிக்கா…

-oOo-

மந்திர கம்பளம் கதை படித்திருக்கிறீர்களா.. வாண்டுமாமா என்ற குழந்தை எழுத்தாளர் எழுதிய சிறுவர் நாவல். என் சிறுவயதில் வாசித்திருக்கிறேன். பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய பிரபலமான எழுத்தாளர் இவர்.  இப்போது அச்சில் இருக்கிறதா தெரியவில்லை. இணையத்தில்.. யாரோ.. ஒரு புண்ணியவான்.. அந்த முழுக்கதையையும் சேமித்து வைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன். பழைய நாட்களின் நினைவுக்கு திரும்புகிறவர்கள்/ விரும்புகிறவர்கள் படித்துப் பார்க்கலாம்.

-)(O)(-

மீடியா பற்றி ஒரு கட்டுரை எழுதத்தொடங்கி இருக்கிறேன். பத்திரிக்கை உலகிலேயே பல காலம் இருந்து விட்டு, அதில் இருக்கும் ஊழல்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் புலம்பி இருக்கிறேன். இப்போது தொலைக்காட்சி ஊடகத்தில் நுழைந்த பின் தான் இங்கே இருக்கும் கோளாறுகள் புலப்படத் தொடங்கி இருக்கின்றன. பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய.. கட்டுரையாக அது உருவாகி வருகிறது. சமயம் வாய்க்கும் போது முழுவதும் முடித்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இது அக்கட்டுரை பற்றிய விளம்பரம்..

-OoO-

வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம் மின்னூலாக இணையத்தில் கிடைக்கிறது தெரியுமா? வேண்டுவோர் இங்கே சொடுக்கி பெறலாம். நன்றி: மதுரை திட்டம்.


Comments

14 responses to “விடுபட்டவை 19 ஜூன் 2008”

  1. //மீடியா பற்றி ஒரு கட்டுரை எழுதத்தொடங்கி இருக்கிறேன்.//

    மிக ஆவலோடு எதிர்பார்க்கிறோம்..
    சிறப்பாய் வர வாழ்த்துக்கள்!!

  2. //பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய பிரபலமான எழுத்தாளர் இவர். //

    கோகுலத்தில் எழுதியிருக்கிறாரா :??

  3. ////பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை உள்ளடக்கிய.. கட்டுரையாக அது உருவாகி வருகிறது. சமயம் வாய்க்கும் போது முழுவதும் முடித்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இது அக்கட்டுரை பற்றிய விளம்பரம்..////

    அசத்துங்க தலை(வரே!)

  4. //ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். //

    தனியாக தரவிறக்கிக் கொள்ள அவசியம் ஏற்படவில்லையே? அப்டேட் ஆகவே வந்துவிட்டது எனக்கு!

  5. \\முயற்சியில அடியேனின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை என்னும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.
    \\

    வாழ்த்துக்கள் அண்ணா..

  6. //கோகுலத்தில் எழுதியிருக்கிறாரா :??//

    ம்.. படித்த நியாபகம் இருக்கே டாக்டர் சார்!

  7. டி.பி.ஆர்.ஜோசஃப் Avatar
    டி.பி.ஆர்.ஜோசஃப்

    இப்போது தொலைக்காட்சி ஊடகத்தில் நுழைந்த பின் தான் இங்கே இருக்கும் கோளாறுகள் புலப்படத் தொடங்கி இருக்கின்றன. //

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுடைய அனுபவத்தை கட்டுரை வடிவில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  8. //கோகுலத்தில் எழுதியிருக்கிறாரா :??//

    //ம்.. படித்த நியாபகம் இருக்கே டாக்டர் சார்!//

    கோகுலத்தில் மட்டுமல்ல கல்கி இதழிலும் பல சிறுவர் படத்தொடர்கதைகளை எழுதியுள்ளார்.முன்பு வெளிவந்த சிறுவர் மாத இதழான இரத்தின பாலா விலும் எழுதியிருக்கிறார் என்றும் எனக்கு ஞாபகம்…

  9. ////கோகுலத்தில் எழுதியிருக்கிறாரா :??//

    ம்.. படித்த நியாபகம் இருக்கே டாக்டர் சார்!//

    அந்த காலத்தில் சிறுவர் மலர், அம்புலிமாமா, சந்தமாமா (ஆங்கிலம்), பூந்தளிர், பூந்தளிர் அமர்சித்திர கதைகள், கோகுலம், கோகுலம் (ஆங்கிலம்), ரத்னபாலா, போன்ற பல புத்தகங்கள் வந்தன (காமிக்ஸ் தனி. அதை நான் சேர்க்கவில்லை). இதில் பூந்தளிரில் மட்டும் தான் அறிவு சார் விஷயங்களுக்கு மத்தியில் ஒன்று அல்லது இரண்டு கதைகள் இருக்கும். பிற புத்தகங்களில் பெரும்பாலும் கதைதான். கோகுலம் சில பக்கங்களை அறிவு சார் விஷயங்களுக்கு ஒதுக்கியிருந்தது

    பூந்தளிரில் வாண்டுமாமா , கௌசிகன் போன்ற பல பெயர்களில் எழுதினார். அமர்சித்திர கதைகள் தவிர்த்த (கபீஷ், ம்ந்திரி, சமாந்தகா, சுப்பாண்டி, ) மீதி அத்தனையும் (பைபிள் கதைகள், நிஜ கதைகள், கிரேக்க கதைகள், உலோகங்களின் வரலாறு, விஞ்ஞானிகளின் கதை, புதிய கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்ட கதை, ஊர்களின் கதை) எழுதியது அவர் தான்.

    சொல்லப்போனால் குழந்தைகளுக்கு (பூந்தளிரில்) எழுதியதை அவர் குமுதத்திலோ விகடனிலோ எழுதியிருந்தால் சுஜாதாவிற்கு போட்டி யிருந்திருக்கும். வரலாறு, அறிவியல், நகைச்சுவை என்று அவர் தொடாத துறைகளை இல்லை. சுஜாதா எழுதி வாண்டுமாமா எழுதாத ஒரே விஷயம் பாலியல் தான் 🙂 🙂 🙂

    மேலும் பூந்தளிரில் ஆசிரியர் குழுவில் அவர் இருந்ததாக ஞாபகம்.

    சில வருடங்களுக்கு முன்னர் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டதாக செய்தி வந்தது.

    பல வற்றை தேடி வாசிக்க வேண்டும் என்ற எனக்கு தோன்றியதில் அவரின் எழுத்திற்கு பங்கு உண்டு.பள்ளிகளில் மற்றும் கல்லூரிகாலங்களின் வினாடி வினா போட்டிகள் நான் பெற்ற பல கோப்பைகளுக்கு பின்னால் பூந்தளிரில் வந்த அறிவு சார்ந்த விஷயங்களும், அதை எழுதிய வாண்டு மாமாவும் இருக்கிறார்கள்

  10. பரிசல்காரனுக்கு ரிப்பீட்டே 🙂

  11. சென்ஷிக்கு ரிப்பீட்டே….:-))

  12. //கோகுலத்தில் எழுதியிருக்கிறாரா :??

    //
    என்னங்க.. அவர் கோகுலத்தில் எழுதாததா? நிறைய எழுதியிருக்கார்..

    கோகுலத்தில் அவர் எழுதிய “சுந்து குண்டு சீமாத்தாத்தா” படிச்சதில்லையா?

    சீமாச்சு

  13. சிந்தாநதிக்கு ரிப்பீட்டே

  14. rachinnathurai Avatar
    rachinnathurai

    oru murai vaantumaamaa vai santhiththu irukkireen.avar ezuthiyatharku thakuntha alavil avar sirappu seyyappadavillai.aanaal antha muthiya vayathilum ezuthinaar.avarai ninaivukku kontu vanthatharku nandri.

Leave a Reply to இத்துப்போன ரீல் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *