விடுபட்டவை 28 ஜூன் 2008

சென்னையில் ஒரு போலீஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சித் தகவலைச்சொன்னார். போக்குவரத்துக்காவலர்கள் அநேக வண்டியை மறித்து, அது இருக்கா, இது இருக்கா என்றெல்லாம் விசாரிக்கிறார்கள். பைன் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்துவார்கள். அதிலும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்காமல் ஓட்டக்கூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். இவர்கள் அப்படியான ஒரு வண்டி கிடைத்துவிட்டால் கொண்டாட்டம் தான். ஆனால் சென்னையில்( தமிழகத்திலும் கூட) ஓடும் எந்த காவல்துறை வண்டிக்கும் இன்சூரன்ஸ் என்பதே இல்லையாம். ஏதாவது ஒரு விபத்து நடந்துவிட்டால்.. பாவம் அந்த போலீஸ் டிரைவர், அவரின் வேலைக்கே உலை வைத்துவிடும் என்பதால்.. பயந்து பயந்தே வாகனங்களை அவர்கள் ஓட்டி வருவதாகச் சொன்னார். மக்களே.. எதில் வேண்டுமானாலும் அடிபடுங்க… போலீஸ் வண்டியில மட்டும் அடிபட்டுடாதீங்க!

-oOo-

யெ : ஓம்  பூர் புவ ஸ்வக.. தட்சபிதூர்.. வரேன்யம்.. பர்கோ…

ஸ் :  மந்திரம் ஓதுற.. வாயில குண்டு வைக்கணும்

பா : You Bastard.. I Will Kil You..

ல : இந்த நாட்டுல யாருக்குமே சமூக அக்கறை கிடையாது

பா: அமெரிக்கக்காரன் உலகை அடிமைப்படுத்த நினைக்கிறான். நாமும் அதுக்கு ஒத்தாசை பண்ணிகிட்டு இருக்கோம்

à®° : Good job.. All indians Are Fools

தி : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.. இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்-னு நினைக்கிறது எப்படி தப்பாகும்?

மேற் சொன்ன எந்த வாசகமும் உண்மைக்கு புறம்பானது அல்ல. அதே சமயம் நான் அவற்றை பிரயோகப்படுத்தவும் இல்லை. இது ஒரு கற்பனையே!

“தசாவதாரம்” படம் நேற்று பார்த்துட்டேன். 🙂

-OoO-

இலக்கிய ஆர்வலர்களுக்கு நவீன விருட்சம் என்ற பெயர் நிச்சயம் அறிமுகமாகி இருக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழ். அது போலவே அழகியசிங்கர் என்ற கவிஞரையும் தெரிந்திருக்கும். வங்கி ஒன்றில் பணியாற்றிக்கொண்டே, தொடர்ந்து நவீன விருட்சம் இதழை கொண்டுவருகிறார். இப்போது வலைப்பதிவு பக்கமும் வந்துவிட்டார். ஜமாலன், நாகார்ஜூனன், ஜ்வேராம்சுந்தர், பைத்தியக்காரன், வளர்மதி, வே.மதிமாறன் வரிசையில் அழகியசிங்கர். வலைப்பதிவர்களுக்கு செம ஜாலி தான் வித்தியாசமான சிந்தனைகளையும், எழுத்துக்களையும் இணையத்திலேயே வாசிக்க கிடைக்கத்தொடங்கி விட்டது. இனி அழகிய சிங்கரின் வலைப்பதிவை படிக்க நவீன விருட்சம் என்ற தலைப்பின் மேல் சொடுக்குங்கள்.

-oOo-


Comments

11 responses to “விடுபட்டவை 28 ஜூன் 2008”

  1. // அது போலவே அழகியசிங்கர் என்ற கவிஞரையும் தெரிந்திருக்கும். //

    யாரு மடோனாவா ?
    🙂

  2. சொல்லுங்க அண்ணன் இன்னைக்கு என்னல்லாம் விடுபட்டுச்சு…

  3. ///மேற் சொன்ன எந்த வாசகமும் உண்மைக்கு புறம்பானது அல்ல. அதே சமயம் நான் அவற்றை பிரயோகப்படுத்தவும் இல்லை. இது ஒரு கற்பனையே!///

    தசாவதாரம் பாத்துட்டிங்களா அதுதான் விசயமா…

  4. தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி…

  5. தசாவதாரத்துக்கு இப்படி ஒரு விமரிசனமா

    சீக்கிரமா விரிவா ஒரு விமர்சனம் போடுங்க அண்ணா

  6. // “தசாவதாரம்” படம் நேற்று பார்த்துட்டேன்.//

    ஆகா… இன்னொரு விமர்சனமா? தாங்காது தல பாத்து செய்யுங்க…

  7. “சென்னையில்( தமிழகத்திலும் கூட) ஓடும் எந்த காவல்துறை வண்டிக்கும் இன்சூரன்ஸ் என்பதே இல்லையாம்”

    பாலா,
    ஒரு பத்திரிக்கையாளரான தாங்கள் இவ்வாறு முழுவதும் ஆராயமல் ஒரு விடயத்தைப் பற்றி எழுதியிருக்க கூடாது.

    மோட்டார் வாகன சட்டத்தில் அரசு வாகனங்களுக்கு கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. காரணம் எளிது!

    மோட்டார் வாகனங்களுக்கு காப்பீடு என்பது, அதனால் ஏற்படும் விபத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு பிரச்னை ஏதும் இன்றி இழப்பீடு வழங்குவதற்காக. அதாவது, இழப்பீடு வழங்க வேண்டிய வண்டி உரிமையாளருக்கு அதற்கான பண வசதி இல்லாமல் இருக்கலாம். எனவே காப்பீடு நிறுவனங்கள் அந்த பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றன.

    ஆனால் அரசு பணவசதி இல்லை என்று கூற முடியாதே!

    மேலும் காப்பீடு என்பதே, பலர் சேர்ந்து சிலரின் இழப்பீட்டினை ஏற்றுக் கொள்வதே. அரசிடம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இருப்பதால் காப்பீடு செய்யாமல் இருப்பதால் லாபம்தான்.

    மற்றபடி எந்த ஒரு விபத்தும் வாகனஓட்டியின் கவனக்குறைவால் ஏற்ப்பட்டது என்றால், அவரது வேலைக்கு பிரச்னைதான். இது அனைத்து ஓட்டுநர்களுக்கும் பொருந்தும். வங்கியில் கணக்கு சரியாகவில்லையெனில் காசாளர் வேலைக்கு பிரச்னை வருமே அது போலத்தான்…

    வாகன காப்பீடு பற்றிய எனது சில பதிவுகளில் சில விபரங்கள் கிடைக்கலாம்

    பின் தொடரும் ஆபத்து
    http://marchoflaw.blogspot.com/2007/01/blog-post.html
    பாவத்தின் சம்பளம்
    http://marchoflaw.blogspot.com/2006/06/blog-post_07.html
    சட்டப்படி சரியான தீர்ப்பா?
    http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post_26.html

  8. //ஆனால் சென்னையில்( தமிழகத்திலும் கூட) ஓடும் எந்த காவல்துறை வண்டிக்கும் இன்சூரன்ஸ் என்பதே இல்லையாம். //

    அடப்பாவமே! (எனக்கு நானே சொல்லிக்கறேன்..) டயர்டா இருக்குன்னு ஹோட்டல்ல ஏதாவது வாங்கிட்டு வாங்க’ன்னு உமா சொல்ல, பைக்ல போறப்ப போன் பேசி, இப்போதான் போலீஸ் ஒருத்தர் நிறுத்தி அரைமணி நேரமா அட்வஸ் பண்ணிட்டிருந்தார்! அவரு நல்ல நேரம் அதுக்கு முன்னாடி இந்தப் பதிவை நான் படிக்கல. படிச்சிருந்தா கிழிச்சிருப்பேன்! (!!!)

  9. எந்த அரசு வாகனத்திற்கும் காப்பீடு கிடையாது.

    அக்கால வாகனம் (அம்பாஸிடர் சீருந்து) அல்லது ஜீப் எதிலாவது இடித்து விட்டால் அதை அரசு பணிமனையிலேயே சரி செய்யலாம். மொத்த செலவு 5000 ரூபாய் மட்டுமே

    இன்னோவா போன்ற வாகனங்கள் எருமை மாட்டின் மீது இடித்தாலே டொயோட்டா பழுது நீக்கும் பணிமனையில் 70000 ரூபாய் கட்ட வேண்டும் (சாமி இது ஒரு உதாரணம் தான். டோயோட்டா காரர்கள் சண்டைக்கு வர வேண்டாம்)

    இது குறித்து தற்பொழுது மறு பரிசீலனை செய்து, கடந்த வருடம் வாங்கப்பட்ட இன்னோவா போன்ற விலை உயர்ந்த வாகனங்களுக்காவது காப்பீடு செய்யலாமா என்று யோசிக்கிறார்கள்

    //மற்றபடி எந்த ஒரு விபத்தும் வாகனஓட்டியின் கவனக்குறைவால் ஏற்ப்பட்டது என்றால், அவரது வேலைக்கு பிரச்னைதான். இது அனைத்து ஓட்டுநர்களுக்கும் பொருந்தும். வங்கியில் கணக்கு சரியாகவில்லையெனில் காசாளர் வேலைக்கு பிரச்னை வருமே அது போலத்தான்…//

    காசாளர் வேலைக்கு ஆபத்து என்பது உண்மை. ஆனால் அரசு துறையில் இப்படியா . . வாகன விபத்தை விட பெரிய குற்றச்சாட்டு (ஊழல்) நிருபிக்கப்பட்ட வர்களே தொடர்ந்து பணியில் தான் இருக்கிறார்கள்

    //ஆனால் அரசு பணவசதி இல்லை என்று கூற முடியாதே!//
    பணம் இருக்கிறது. மணம் (வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற மணம்) இல்லை.

    நீதிமன்றங்களால் “ஜப்தி” செய்யப்படும் அரசு பேரூந்துகளே இதற்கு ஆதாரம் !!

  10. மத்திய கைலாஷ் சிக்னலில் நடக்கும் கூத்துக்களை விரிவாக எழுதவும் 🙂

  11. hai bala, are u busy with your new job? write atleast once a week with some good things..

Leave a Reply to லக்கிலுக் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *