விடுபட்டவை 8 ஜூலை 2008

சனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன்.  ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்கு எல்லாம் நேரு உள்விளையாட்டரங்கில் வந்துவிடும் படி அறிவுறுத்தப்பட்டு போய் சேர்ந்தேன். கொஞ்சம் கூட்டம் இருந்தது. வாசலிலேயே ஒரு வர் எங்களை மடக்கி, “சார் எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்குமா?” என்று கேட்க இல்லை என்று சொல்லிவிட்டு நாங்கள் உள்ளே போனோம். கடுமையான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். சினிமா பாட்டுக்கள் போட்டார்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.

ஏழு மணிக்குத் தான் நிகழ்ச்சி  தொகுப்பாளர்கள் மேடை ஏறினார்கள். மகா மொக்கையை காண முடிந்தது, தமிழிசை விருது வழங்கு விழா.. இசை பற்றிய துளியும் ஆர்வமோ, அறிவோ இல்லாதவர்களாக அவர்களின் பேச்சு எனக்கு பட்டது. முதலில் நடிகை சோபனா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடந்தது. மூன்று பேர் கொண்ட குழுவில் தன்னை முன்னிருத்து சோபனா ஆடாதது மகிழ்ச்சியைத்தந்தது. தன் கூட ஆடும் மற்ற நடனக்காரர்களின் ஆட்டத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மூவரும் சம அளவின் வாய்ப்புக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

அதன் பின் விக்கு விநாயகராமின் உறவுக்கார இளைஞர்களின் கடம்+ கஞ்ஜிரா இசை நிகழ்ந்தது. இவர்கள் மேடை ஏற தாமதமானதால்.. பார்வையாளர்கள் மத்தியில் இருந்து, பயங்கரமான கூச்சல் எழுந்தது. கூப்பிய கைகளுடன் மேடை ஏறிய அவர்கள் சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை கைதட்டி ஆட்டம் போட வைத்தது வியப்பாக இருந்த்து. “கத்தவா செய்யுற.. இப்பப் பாருடா மகனே..” என்று கங்கனம் கட்டிக்கொண்டு பார்வையாளர்களை ஆட்டுவித்தார்கள்.

அடுத்ததாக லால்குடி ஜெயராமன், கடம் ஸ்பெசலிஸ் விநாயகராம், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் மேடை ஏற்றப்பட்டார்கள். உட்காருவதற்கு நாற்காலிகள் இல்லாமல் நிற்கவைக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து நாற்கலிகளை கொண்டு வந்து போட்டு அமரச்சொன்னார்கள். அதன் பிறகு பத்து நிமிடம் கழித்து தொகுப்பாளர்கள் மேடைக்கு வந்து, இவர்களுக்கு விருது வழங்கப்போகும் செய்தியைச் சொன்னார்கள்.

அறிவிக்கப் பட்ட எழு நிமிடங்களுக்கு பின் விருது வழங்குபவர் மேடைக்கு வந்தார். மூன்று நிமிடம் தாமதமாக விருதுடன் ஒய்யார நடை போட்டார் விருது சுமந்த பெண். அப்புறம் விருது வழங்கப்பட்டது. கை தட்டல் கூட பெரிய அளவில் இல்லை. இதற்கிடையே இவர்களைப் பற்றி மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பெரிய திறையில்.. விருது பெறுபவர்களைப் பற்றிய செய்தி தொகுப்பு ஓடியது. மீண்டும் மேடையில் நிர்க்கவைக்கப் பட்டார்கள். எனக்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது கொள்ளை கோபம் வந்தது. பார்வையாளர்களிடம் இருந்தும் கைதட்டல் இல்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது.

வயதான, திறமையான பெரியவர்களை சரியாக நடத்தத்தெரியாத கும்பல் இது. இனியும் தொடர்ந்து பார்க்க முடியாது என்று தெளிவாகப் புரிந்து போனது. இனி  குழுக்கல் ஆட்டமோ குத்தாட்டமோ இருக்கலாம். அதற்கு கை தட்டல் காதை பிளக்கலாம். என்னால் இருக்க முடியவில்லை. அழைத்துப் போன நண்பர்களும் அதே நிலையில் இருந்தார்கள்.

எல்லோருமாக வெளியே வந்தோம். வாசலில் செக்யூரிட்டி கேட்டார், ‘ஏன் சார் புடிக்கலையா?’ “எப்படி கட்டு புடிச்சீங்க?” ‘இதுக்கு முன்னாடியும் கொஞ்ச பேர் கிளம்பி போய்ட்டாங்களே’ “ஆமாங்க.. நாங்க கொஞ்சம் லேட்டு” என்ற படியே வெளியே வந்தோம். மணி எட்டாகி இருந்தது.  உள்ளே போகும் போது எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்ட ஆசாமி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.. வருவோரிடம் அதே கேள்வியை கேட்ட படி..

-OoO-

சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன். கதை 2008ல் தொடங்குகிறது என்றாலும் 1980-களில் தான் 95% கதை நகர்கிறது. சின்ன படம் தான். இசை ஜேம்ஸ்வசந்தன் நன்றாக அடித்து ஆடி இருக்கிறார். பின்னனி இசையும் ரசிக்கும் படி செய்திருக்கிறார். வெட்டியாக சுற்றும் இளைஞர் பட்டாளம் ஒன்று வளரும் அரசியல்வாதியால் எப்படி சீரழிகிறார்கள் என்பது தான் கதை. இடையே ஒரு மெல்லிய காதல். அதும் 80களின் காதல்..! எல்லோரையும் விட படத்தின் எனக்கு மனதில் நிற்கும் கேரட்டர்கள் இரண்டு பேர் மட்டுமே! படத்தின் நடித்திருக்கும் இயக்குனர் சசிகுமார், இயக்குனர் சமுத்திரக்கனி. இருவரும் படம் பார்த்து வெளி வந்து கிட்டதட்ட 16 மணி நேரம் கழித்தும் மனதில் நிற்கிறார்கள். கஞ்சாகருப்பும் நன்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார். கலை + ஒளிப்பதிவும் மிகச்சிறப்பு. அதிலும் கடைசியில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சியை வியந்தே ஆக வேண்டும். மொத்தத்தில்.. பலகோடி செலவு செய்து எடுக்கப்பட்ட தசாவதாரம் படம் பார்த்ததை விட எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. (இப்படத்தில் இருக்கும் அரசியல்+நுண்னரசியல் குறித்து எல்லாம் நான் சொல்லவில்லை)

_OoO_

மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ”மிஸ்கால்”. பொதுவாகவே நான் எந்த மிஸ்காலையும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. ஆனாலும் தொடர்ந்து எனக்கு மிஸ்கால் விடுபவர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை.  சமீபகாலமாக எனக்கு சில டேண்ட்லைன் நம்பரில் இருந்து எல்லாம் மிஸ்கால் வருகிறது. 🙁

-OoO-

நிராகரிப்பின் வலி, பிரிவின் துயரம் எல்லாம் கொடிது தான்.. எப்போது நாம் நேரடியாக பேசுகிறோமோ.. அதுவரை! ஆம்.. எனக்கு மனம் இப்போ கொஞ்சம் லேசானது மாதிரி இருக்கிறது. என் மீதோ, அவள் மீதோ தவறுகள் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதே மகிழ்வானதாக இருக்கிறது. போலி கவுரவம், போலி மரியாதை, போலி சமூகம் போன்ற போலிகளால் எவ்வளவு துன்பப்படுகிறோம் என்பதையும் உணரமுடிந்திருக்கிறது, தவறுகளின் தொடக்க நிலை குறித்தும் அறிய முடிந்தது. இனி எப்போதும் போல்.. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பழகிட முடியும் என்பதே நிறைவானதாக இருக்கிறது. பேசுங்கள்.. பேசுங்கள்.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் கோபம் இன்றி, சுயலாபமின்றி பேசுங்கள்.. பேச்சின் சக்தி மிக அதிகமனது என்பதை இப்போது உணர்கிறேன்.


Comments

22 responses to “விடுபட்டவை 8 ஜூலை 2008”

  1. ஜோ Avatar
    ஜோ

    //பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை.//
    //பொதுவாகவே நான் எந்த மிஸ்காலையும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. //

    சீக்கிரமா சாருநிவேதிதா ஆயிடுவீங்க போலிருக்கே.

  2. சுப்பிரமணியம் பட விமர்சனம் அருமை.

    *** ***

    //பேச்சின் சக்தி மிக அதிகமனது//

    மிக மிக உண்மை.

  3. மிஸ்ட் கால் கொடுத்தா அழைக்க மாட்டீங்களோ..அப்புறம் என்னாத்துக்கு ரெண்டு போன் வெச்சிருக்கீங்க..பேசாம ஒண்ணை எங்கிட்ட கொடுத்திட வேண்டியதுதானே….

  4. மிஸ்ட் கால் கொடுத்தா அழைக்க மாட்டீங்களோ..அப்புறம் என்னாத்துக்கு ரெண்டு போன் வெச்சிருக்கீங்க..பேசாம ஒண்ணை எங்கிட்ட கொடுத்திட வேண்டியதுதானே….

  5. நீங்களும் சுப்பிரமணியபுரம் பார்த்தீங்களா? 🙂

    இன்னொரு வாட்டி சேர்ந்து பார்க்கலாமா?

    ///என் மீதோ, அவள் மீதோ தவறுகள் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதே மகிழ்வானதாக இருக்கிறது.////

    வாழ்த்துக்கள். எனக்கு வயிற்றை கலக்குகிறது. ரெஜிஸ்டர் ஆபிஸ் வரமுடியுமான்னு தெரியலை 🙁

  6. ///டி.அருள் எழிலன் July 8th, 2008 at 11:35 am
    மிஸ்ட் கால் கொடுத்தா அழைக்க மாட்டீங்களோ..அப்புறம் என்னாத்துக்கு ரெண்டு போன் வெச்சிருக்கீங்க..பேசாம ஒண்ணை எங்கிட்ட கொடுத்திட வேண்டியதுதானே….
    ////

    அதானே? பொதுவுடைமை பேசுறவரு எதுக்கு ரெண்டு போனு வெச்சிருக்கணும்? இல்லாதவங்களுக்கு ஒண்ணு கொடுக்கலாமே?

    இல்லேன்னா ரெண்டு சிம்மையும் ஒரே நோக்லா போன் வாங்கி அதிலேயே அடைத்து ஒரே போனாக்கி கொள்ளவும்.

  7. தூயா Avatar
    தூயா

    ஆகா நல்ல வேளை நான் உங்களுக்கு மிஸ்ட்கால் குடுக்கவில்லை. ஆனால் இனிமேல்..கிக்கிகிகிகி பாலாண்ணா மாட்டிட்டிங்களா?? 😉

  8. //நிராகரிப்பின் வலி, பிரிவின் துயரம் எல்லாம் கொடிது தான்.. எப்போது நாம் நேரடியாக பேசுகிறோமோ.. அதுவரை! ஆம்.. எனக்கு மனம் இப்போ கொஞ்சம் லேசானது மாதிரி இருக்கிறது. என் மீதோ, அவள் மீதோ தவறுகள் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதே மகிழ்வானதாக இருக்கிறது. போலி கவுரவம், போலி மரியாதை, போலி சமூகம் போன்ற போலிகளால் எவ்வளவு துன்பப்படுகிறோம் என்பதையும் உணரமுடிந்திருக்கிறது, தவறுகளின் தொடக்க நிலை குறித்தும் அறிய முடிந்தது. இனி எப்போதும் போல்.. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பழகிட முடியும் என்பதே நிறைவானதாக இருக்கிறது. பேசுங்கள்.. பேசுங்கள்.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் கோபம் இன்றி, சுயலாபமின்றி பேசுங்கள்.. பேச்சின் சக்தி மிக அதிகமனது என்பதை இப்போது உணர்கிறேன்.//

    நல்லா இருந்த புள்ளை இப்படி ஆய்டுச்சே. யாரு கண்ணு பட்டுதோ??? தலை எப்போ ரெஜிஸ்டர் ஆஃபிஸ் கூப்பிட்டாலும் நான் வர்றேன்.

  9. //நல்லா இருந்த புள்ளை இப்படி ஆய்டுச்சே. யாரு கண்ணு பட்டுதோ??? தலை எப்போ ரெஜிஸ்டர் ஆஃபிஸ் கூப்பிட்டாலும் நான் வர்றேன்.//

    :)))

    நன்றி நண்பா.. உங்க மாதிரி நண்பர்கள் இருக்குற தைரியத்துல வேலையை தொடங்கியாச்சு.. அழைப்பு நிச்சயம் உண்டு நந்தா..! அதுவும் விரைவில்.. 🙂

  10. ////பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை.//
    //பொதுவாகவே நான் எந்த மிஸ்காலையும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. //

    சீக்கிரமா சாருநிவேதிதா ஆயிடுவீங்க போலிருக்கே.//

    வழிமொழிகிறேன்… 😉

  11. //வழிமொழிகிறேன்… 😉 //

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நீங்க ரெண்டு பேரும் சொல்லுறது.. சாருவுக்கு தெரியுமா..? 🙂

  12. கேட்டுச் சொல்லவா? 🙂

  13. விருதுகளின் அருமையும்,விருது வாங்கியவர்களின் பெருமையும் தெரியாமல் ஒப்புக்காக நிகழ்ச்சிகளை வெற்று விளம்பரங்களுக்கு நடத்துவது கண்டிக்கதக்கது.சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  14. //இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. //

    சொல்லிட்டீங்க இல்ல…பாத்துக்குவோம்…

    //சீக்கிரமா சாருநிவேதிதா ஆயிடுவீங்க போலிருக்கே.//

    ஆல்ரெடி ‘ஆயி’ட்டாருங்க…

  15. நன்றாக ரசிக்கும்படியாக எழுதுகிறீர்கள். ஆனால் மிகக் குறைவாக எழுதுவதாகத் தோன்றுகிறது.

  16. // நன்றி நண்பா.. உங்க மாதிரி நண்பர்கள் இருக்குற தைரியத்துல வேலையை தொடங்கியாச்சு.. அழைப்பு நிச்சயம் உண்டு நந்தா..! அதுவும் விரைவில்.. 🙂 //

    ஆஹா! மிகவும் நல்ல செய்தி!!!!

  17. @ லக்கிலுக்

    //இல்லேன்னா ரெண்டு சிம்மையும் ஒரே நோக்லா போன் வாங்கி அதிலேயே அடைத்து ஒரே போனாக்கி கொள்ளவும்.//

    என்ன.. நோக்கியாவுக்கு போட்டியா மடிப்பாக்கத்துல தொழிற்சாலை ஆரம்பிச்சுட்டாரா?

    @ பாலபாரதி

    //சுயலாபமின்றி பேசுங்கள்.. பேச்சின் சக்தி மிக அதிகமனது என்பதை இப்போது உணர்கிறேன்//

    இதில் சுயலாபமின்றி என்பது அடைப்புக்குறிக்குள் இடவேண்டிய வார்த்தை! எங்கே விட்டுக்குடுத்தலுடன், விருப்பு வெறுப்பின்றி பேச்சு நடக்கிறதோ அங்கே நட்பெனும்/காதலெனும் பூ மலரும்!

    வாழ்த்துக்கள் தலைவா!

  18. \\
    பேசுங்கள்.. பேசுங்கள்.. எந்த பிரச்சனையாக இருந்தாலும் கோபம் இன்றி, சுயலாபமின்றி பேசுங்கள்.. பேச்சின் சக்தி மிக அதிகமனது என்பதை இப்போது உணர்கிறேன்.
    \\

    அண்ணா
    இருக்க இருக்க பரங்கிமலை லக்கிலுக்கானந்தா மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்களே

  19. \\ சுப்ரமணியபுரம் படம் பாருங்க.. நல்லா வந்திருக்கு.. தசாவதாரத்தை விட! 🙂 \\

    அறிவிப்பு பலகையில் இருக்கும் இந்த அறிவிப்பை நீக்கவும் .

    அப்படி இன்னாதான் கமல் மேல உங்களுக்கு காண்டு

  20. /////உள்ளே போகும் போது எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்ட ஆசாமி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.. வருவோரிடம் அதே கேள்வியை கேட்ட படி../////

    ஐயோ பாவம்! அவரிடம் நீங்கள் வெளியே வந்த காரணத்தைச் சொல்லியிருக்கலாமே கவிஞரே! வீட்டிற்குப் புறப்பட்டிருப்பாரே, அங்கே நின்று நேரத்தை வீணாக்காமல்!

  21. //மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ”மிஸ்கால்”. பொதுவாகவே நான் எந்த மிஸ்காலையும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால்.. மிஸ்கால் விடுபவர்களைக் கண்டால் எனக்கு ஏனோ ஆகவே மாட்டேங்கிறது. ஆனாலும் தொடர்ந்து எனக்கு மிஸ்கால் விடுபவர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. சமீபகாலமாக எனக்கு சில டேண்ட்லைன் நம்பரில் இருந்து எல்லாம் மிஸ்கால் வருகிறது//

    தல, மிஸ்ட் கால் தான் சரி. அப்பறம் டேண்ட்லைன் = லேண்ட்லைன். ஒருவேளை ஏதே ஒரு மிஸ் உங்க மிஸ்ஸ் ஆக ட்ரை பண்ணலாமில்லையா? ஆகவே மிஸ்ட் கால்களை ஒரேடியாக வெறுக்க வேண்டாம்.

    அப்பறம் இந்த பிரச்சனைக்கு உண்மையான காரணம் தெரியனுமா? இங்கே க்ளிக்கவும். http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D+%3A+9940203132&btnG=Search&meta=

    Muhammad Ismail .H, PHD,

  22. அப்போ ஏற்கனவே நடந்த கல்யாணத்தை என்ன பண்ண?

    முதல் மனைவி இருக்கையில் இன்னொரு கல்யாணம்னா ஜெயில்ன்னு பத்திரிக்கைகாருக்கு தெரியாதா??

Leave a Reply to தூயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *