இந்த கவிதைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்..

சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு எழுதிய குறுங்கவிதை இது.

ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக்காசு
ஏமாளித் தமிழன்

இப்போது நினைவுக்கு வந்ததற்கு காரணம் இந்த செய்தி தட்ஸ்தமிழ்டாட்காம்

உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்க! அல்லது யாரிடமாவது பேசுங்க!! 🙂


Comments

15 responses to “இந்த கவிதைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்..”

  1. மெய்யாலுமே டெஸ்ட் தாம்பா..

  2. விஜய் ஆனந்த் Avatar
    விஜய் ஆனந்த்

    என்னத்த சொல்றதுங்க…நானும் தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு 10 கோடி தர்றேன்…சீக்கரம் ஆவட்டும்….

  3. நரி வேஷம் களைஞ்சு போச்… டும்..டும்..டும்

    காட்டை விட்டே ஓடிப் போச்…டும்..டும்..ம்..ம்.

    :-((. இன்னும் வரும்! இது காலத்தின் கட்டாயம்!! சத்யம் பேசணும்!!!

  4. சாரி ரஜினி 🙁

  5. மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

  6. என்ன நடந்தாலும் தமிழர்கள் ரஜினியை புறக்கணிக்க மாட்டார்கள், என்று தமிழர்களின் பெருந்தன்மையை (இளிச்ச வாய்த்தனத்தை) சரியாகவே கணித்தது

    ரஜினி மட்டுமல்ல
    தயாரிப்பாளரும் கூடத்தான்.

    சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சி (2002ல் தொடர்வண்டி துறையின் இணையமைச்சர் உள்ள கட்சி) எதிர்த்தாலும் தமிழகத்தில் பாபா வெளியிடப்பட்டது. ஓடியது. படம் தோல்வி அடைந்ததற்கு படமும் ஒரு காரணம்தான்

    தமிழக அரசியல் கட்சியை 2002ல் கண்டு கொள்ளாத ரஜினி, கர்நாடகத்தில் டெபாசிட் கூட பெற முடியாத ஒருவரை கண்டு 2008ல் காலில் விழுந்து சரணடைந்தது, அதுவும் அவர் போற்றி புகழும், அவரது அரசியல் குரு தினமும் வாழ்த்தும் பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயே அவரது படத்தை வெளியிட முடியாத நிலைமை.
    ஏன் என்று ரஜினி ரசிகர்கள் தான் கூற வேண்டும்

    பா.ம.க என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்

    இத்ன் மூலம் தெரிவது என்ன வென்றால் நான் எதிர்பார்த்ததை விட, நான் கணித்ததை விட ரஜினி ஒரு சிறந்த அரசியல் வாதி !!!

    ஆனால்…..

    என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும், குசேலன் தமிழகத்தில் ஓடினாலும் ஓடாவிட்டாலும் , கருநாடகத்தில் ஓடினாலும், ஓடாவிட்டாலும், நிதர்சணமான (சிலருக்கு கசப்பான) உண்மை. ரஜினியின் அரசியல் சகாப்தம் 31-07-2008 உடன் முற்றிலும் முடிந்து போய்விட்டது…. (அதாவது தமிழக அரசியல் சகாப்தம்)… 2004 நாடாளுமன்ற தேர்தலிலேயே குற்றுயிராகத்தான் இருந்தது வேறு விஷயம். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ரஜினியின் அரசியல் வாழ்க்கையின் முச்சு குழாயை ரஜினியே நிறுத்து விட்டது நகைமுரண்.

    தன்னை ஒரு அரசியல் வாதியாக நீக்கமற பறைசாற்றும் ஒரு சம்பவமே ஒருவரின் அரசியல் வாழ்விற்கு சாவு மணி அடிப்பது விநோதம் தான்

    வாழ்க்கையும் விநோதம் தான்

    //உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்க!//
    தோன்றியதை சொல்லிவிட்டேன்.

  7. பெத்தராயுடு Avatar
    பெத்தராயுடு

    //மன்னிக்கிறவன் மனுஷன் மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்//

    அதுக்குத் ‘ஆமாஞ் சாமி’ன்னு தலையாட்றவன் இளிச்சவாயத் தமிழன்!

  8. நரி வேஷம் களைஞ்சு போச்… டும்..டும்..டும்

    காட்டை விட்டே ஓடிப் போச்…டும்..டும்..ம்..ம்.

    :-((. இன்னும் வரும்! இது காலத்தின் கட்டாயம்!! சத்யம் பேசணும்!!!

  9. என்னமோ போங்க ! யாரு கருத்து சொல்லவேண்டுமானாலும் தட்ஸ்டமில துணைக்கு இழுத்துகிட்டு வர்றீங்க:)

  10. சிவஞானம் ஜி Avatar
    சிவஞானம் ஜி

    ஒரு சொட்டு வியர்வைக்கு
    ஒருபவுன் தங்கக்காசு
    ஒரு சொட்டு தண்ணிக்கு….?

  11. தொடர்புடைய என்னுடைய ட்விட்டர்: Twitter / Balaji: @anbudan_BALA மன்னிக்கத் தெ…

  12. ரஜினி என்ன செய்வார் பாவம். எழுதிக்கொடுத்தால் தான் அவருக்கு வசனம் பேச வரும் போல. இல்லாவிட்டால் இப்படி உளறிக்கொட்டி கொண்டிருப்பார். பஞ்ச் டயலாக்கெல்லாம் படத்துக்கு தான் ஒத்து வரும்.

    இனியாவது தமிழக மக்கள், ரஜினி ரசிகர்கள் திருந்துவார்களா பார்ப்போம். குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா அல்லது வரிந்துக்கட்டி கொண்டு குசேலன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதை நிறுத்துவார்களா என்று பார்ப்போம்.

    இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தான் கேட்க தோன்றுது

  13. உணமையிலே சத்யராஜ் அனாவசியமா இவரைத் திட்டரதாத்தான் நான் முதலில் நினைச்சேன். வயத்தெரிச்சல்னு கூட நினைச்சுகிட்டேன். ஆனா அன்னிக்கு அவர் பேசினது ரொம்பக் குறைச்சல்னு இப்பத் தோணுது. இதுக்கும் ஒரு சப்பைக்கட்டு வரும் பாருங்க – அவர் அடிப்பேன் உதைப்பேன்னு பேசினதை மட்டும்தான் மறுத்தார், தமிழக ஆதரவு நிலைய இல்லைன்னு…(அநேகமா அடுத்த வார துக்ளக் தலையங்க இதுவாத்தான் இருக்கும், ராஜ குருவாச்சே, விட்டுக் கொடுப்பாரா?) சிரிக்கத்தான் தோணுது இந்த சாயத் தொட்டில குதிச்ச நரிகளைப் பாத்து….

  14. சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் …

    சு…ஊஊஊஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்ர் ரசிகனுங்க………………

Leave a Reply to புருனோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *