விடுபட்டவை 09-ஆகஸ்ட்-08

சின்னத்திரை மற்றும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. 22 சின்னத்திரை விருதுகள். 36 சினிமா தேர்வாகி இருந்தது, தரமான படம் என்று. இதை தேர்வு செய்தவர்கள்.. இரு நீதிபதிகள் என்பது காமெடி. அதில் கலைஞர் வசனம் எழுதிய படங்களும் அடக்கம். அதை விட சோகம்.. சில கிளு கிளு படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது தான். அதில் ஒரு படத்தின் பெயர்.. சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! (பா.ம.க-வின் இலக்கணம் படம் தேர்வாகி இருந்தும் யாரும் விருது பெற வராமல் விருதை புறக்கணித்தனர். இப்படத்தை பரிசீலிக்கும் படி முதல்வர் கருணாநிதியை படத்தயாரிப்பாளருடன் ஜி.கே.மணியும் சந்தித்தார் என்பது குறிப்பிட தக்கது)

-@@@-

“மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் தராமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இதுதான் உங்கள் போக்கு என்றால் முதல்வரும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகட்டும். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நாங்கள் வாரண்ட் பிறப்பிக்கிறோம். இதுபோன்ற சம்பவம் நீதிமன்றத்தில் நடக்க வேண்டுமா? இது வெறுக்கத்தக்கச் செயல்’ என்று கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி உச்சநீதி மன்றம்  தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  ஆனால்.. தமிழக முதல்வரோ.. தமிழக அரசுக்கு தகவல் சொல்லவில்லை என்று கூறி, அரசு வழக்கறிஞர்களை பணி நீக்கம் செய்திருக்கிறார். எது உண்மையோ..! கண்ணை கட்டுது சாமி!

-@@@-

பாலபாரதியாகிய நான் மிகுந்த தலை கணத்துடன் நடந்து கொள்வதாய்.. எல்லோருக்கும் பாசமிகு அண்ணன் ஒருவர் புலம்பி வருகிறார். உண்மையில்.. அவரின் வயதுக்கும், அனுபவத்திற்கும் நிறைய மதிப்பு கொடுத்தே வந்திருக்கிறேன் நான். என்ன.. அவரோடு உட்கார்ந்து, அவரைப் போல எதிர்படும் பெண்கள் பற்றி மோசமாக கமெண்ட் அடிப்பதில்லை. அவரோடு இருந்து எந்த சீன் படங்களும் பார்ப்பதில்லை என்பதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனாலும்.. எனக்கு ஆவாததை நான் எப்படி செய்ய முடியும். 🙁 எல்லாத்தையும் அந்த சுப்பையா பார்த்துக்கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் ஓடுகிறது வாழ்க்கை!

-@@@-

என்னமோ தெரிய நண்பர்களே.. இந்த வருடம் இதுவரை எனக்கு நல்ல வருடமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு வருடமாக எழுதிக்கொண்டிருந்த நெடுங்கதையை முடித்து அச்சுக்கு கொண்டு வந்து விட்டேன். விறபனையும் பரவாயில்லை என்றே சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது உண்மை!

–@@@–

இனி மோட்டு வளையை வெறிக்க வேண்டியதிருக்காது.. யார் இருக்கா.. என்று தெரு முழுக்க அலைந்து நடுநிசி வீடு திரும்ப வேண்டியதிருக்காது.. கை ஒடிந்தாலோ, உடம்பு முடியாமல் போனாலோ.. தனிமை குறித்து வருந்தி தலையணை நனைக்க வேண்டியதிருக்காது. இனி கொஞ்சம் பொறுப்புடன் நானும் நடந்து கொள்ள வேண்டும். என்னையும் மனிதனாக மதித்து.. வீட்டு காரியங்கள், விசேசங்கள் என்று எல்லா நிகழ்வுக்கும் அழைப்பார்கள். ஆம் நண்பர்களே.. இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.


Comments

38 responses to “விடுபட்டவை 09-ஆகஸ்ட்-08”

  1. //இது வெறுக்கத்தக்கச் செயல்’ என்று கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி உச்சநீதி மன்றம் தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. //

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கெல்லாம் ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபோல எச்சரிக்கை விடுப்பதில்லை என்பது என்னுடைய நீண்டநாள் கேள்வி.

    //வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    வாழ்த்துக்கள் 🙂

  2. gulf-tamilan Avatar
    gulf-tamilan

    //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    good news !!!

  3. //ஆம் நண்பர்களே.. இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    நல்ல முடிவு. முதல்ல இதைச் செய் ராசா.. நல்லாயிருப்ப..

    வாழ்க வளமுடன்

  4. சிவஞானம் ஜி Avatar
    சிவஞானம் ஜி

    //இவ்வருட இறுதிக்குள், வாழ்க்கைத்துணை ஒருவரை முடிவு
    செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்று
    முடிவுக்கு வந்திருக்கிறேன்//

    ஓஹோ! இதுதான் ‘முக்தி’ என்பதா?

    வாழ்த்துகள் பாலா & பாலா

  5. பாலா!
    எல்லாத்தையும் விட கடைசி மேட்டர் டாப்பு!
    இதென்ன கலயாண வருஷமா? முதல்ல பிரகாஷ்! அடுத்தது நீங்க! எப்ப லக்கி?! கண்டிப்பா பத்திரிகை அனுப்புங்க! முடிஞ்சா சென்னையிலேயே கல்யாணத்தை வையுங்க பாஸ்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

  6. குசும்பன் Avatar
    குசும்பன்

    //ஆம் நண்பர்களே.. இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    அண்ணே ரொம்ப சந்தோசமாக இருக்கு! சீக்கிரம் நல்ல செய்தியை சொல்லுங்க.

  7. // வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம்//
    மாம்ஸ், வாங்க வாங்க!

  8. குசும்பன் Avatar
    குசும்பன்

    //வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    அப்ப கல்யாணம் ஆனவங்க எல்லாம் முக்தி அடைந்தவங்களா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  9. எனக்கு இவ்வருடத்தின் மிக மிக சந்தோஷமான செய்தி

  10. வாழ்த்துக்கள்!

  11. //
    இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன
    //

    என்ன தலை…. முதல்வரியிலே சொல்லவேண்டிய சந்தோஷமான மேட்டரை இப்படி கடைசியிலே சொல்றீங்க?

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ஒரே குஜாலா கீதுப்பா……. ஒரு ஜிங்காரோ பீர் குடிச்சு இதை கொண்டாட போறேன் 🙂

  12. தல கடைசியா மேட்டருக்கு வந்திட்டீங்க… என் ஆதரவும். வாழ்த்தும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

  13. மின்னல் Avatar
    மின்னல்

    எங்க சொல்லிகிட்டே தான் இருக்கிங்க 🙂

  14. Thangamani Avatar
    Thangamani

    வாழ்த்துக்கள், நெடுங்கதைக்கும், வாழ்க்கைத் துணைக்கும்!

  15. முன் நவீனத்துவ காவியமான குசேலன் பத்தி நானு(ம்) ஒரு பதிவு போட்ருக்கேன். வந்து எதுனா சொல்லுங்க தல.

  16. கடைசி பிட் சூப்பர்.

    அவ்வண்ணமே ஆகுக!!!

    ஆசிகள்.

  17. //மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது உண்மை!//
    //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    WoW … I am very happy to know this !

    Good luck and all the best Bala !!!

  18. தூயா Avatar
    தூயா

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி பாலாண்ணா 🙂 வாழ்த்துகள்

  19. வடுவூர் குமார் Avatar
    வடுவூர் குமார்

    சீக்கிரம்.சீக்கிரம்…

  20. பேச்சிலர்கிட்டருந்து ஜம்ப்பாகி நம்ம க்ரூப்புக்கு வரும் உங்களை உங்களை வரவேற்கிறோம்! (இனிமேதான் இருக்கு தல!!)

  21. மிக்க மகிழ்ச்சி…வாழ்த்துக்கள்!

  22. //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
    //
    நல்ல முடிவு பாலபாரதி.. உங்களுக்கு நல்லதொரு மனைவி கிடைக்க்க என் வாழ்த்துகளும் நல்லெண்ணங்களும்..

    அன்புடன்,
    சீமாச்சு..

  23. வாழ்த்துக்கள் பாலா.

  24. வாழ்த்துக்கள்..

  25. சிவஞானம் ஜி Avatar
    சிவஞானம் ஜி

    அங்கே (வெவ்வேறு பதிவுகளில்)
    குசும்பனும்,நிஜமா நல்லவனும்
    பிரிச்சு மேயுறாங்க
    வரிகளுக்கு இடையே
    அர்த்தம் பிடிக்கிறாங்களா?
    என்னானு விஷயத்தைப் போட்டு உடையுங்களேன்.
    உஸ்ஸ்ஸ்ஸ்…….அப்பாடா…….

  26. //22 சின்னத்திரை விருதுகள். 36 சினிமா தேர்வாகி இருந்தது, தரமான படம் என்று.//

    அடேங்கப்பா… தமிழ்ல 36 தரமான படமா?? யாருப்பா அது?? தமிழ்ல தரமான படமே வரதில்லன்னு சொல்றது?

    //தமிழக முதல்வரோ.. தமிழக அரசுக்கு தகவல் சொல்லவில்லை என்று கூறி, அரசு வழக்கறிஞர்களை பணி நீக்கம் செய்திருக்கிறார். எது உண்மையோ..! கண்ணை கட்டுது சாமி!
    //

    பலியாடுகள்க்கு டிக்ஷனரியில அர்த்தம் தேட வேண்டியதே இல்லை…

    //மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது உண்மை!//

    வாழ்த்துக்கள். இதைக் கேட்கும் நாங்களும் மகிழ்ச்சியாகிறோம் என்பது உண்மை.

    //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    வாவ்…Welcome to the club.. 🙂

  27. //அவரோடு உட்கார்ந்து, அவரைப் போல எதிர்படும் பெண்கள் பற்றி மோசமாக கமெண்ட் அடிப்பதில்லை. அவரோடு இருந்து எந்த சீன் படங்களும் பார்ப்பதில்லை என்பதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்//

    இருக்காதா பின்னே… இவ்ளோ நெருக்கமா பழகிட்டு இத மட்டும் அவர் கூட சேராம தனியா பண்ணிட்டு இருந்தா வருத்தம் இருக்கத் தானே செய்யும்? 😛

    அந்த கடைசி மேட்டுருக்கு பிடியுங்கள் ஒரு சூப்பர் வாழ்த்து… சீக்கிறமே பத்திரிக்கை அனுப்புங்க…

    ….. ஆசிப் அண்ணாச்சி சொன்னதா குசும்பன் ஒரு பதிவு போட்டிருக்காரே… அதுல எதும் உண்மை இருக்கா? :)))

  28. Saravanan Avatar
    Saravanan

    //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    சந்தோசம் தான் இருந்தாலும் இனிமேல் உங்களோட டீ கடையில உக்காந்து மணிக்கணக்கா பேச முடியாது, ஒரே நேரத்துல ஒரு பாக்கெட் சிகரெட்டை அடிச்சிக்கிட்டே வரலாறையும் அரசியலையும் பேச முடியாதுன்னு நெனைச்சா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. கண்டிப்பா கல்யாணத்துக்கு கூப்பிடுங்க.. சென்னையிலேயே திருமணம் வைங்க…

    //பாலபாரதியாகிய நான் மிகுந்த தலை கணத்துடன் நடந்து கொள்வதாய்.. எல்லோருக்கும் பாசமிகு அண்ணன் ஒருவர் புலம்பி வருகிறார்.//

    எனக்கு பாசமிகு அண்ணன் நீங்கள் தான் ..உங்களை யாரு தப்பா சொன்னாலும் பிரச்சனையாயிடும்னு சொல்லிவைங்க…

  29. வாழ்த்துக்கள் 🙂 🙂

    இடுகையை முதலில் வாசித்திருந்தால் இன்று நேரில் வாழ்த்து கூறியிருப்பேன்

    //எப்ப லக்கி?! //

    🙂 🙂

  30. வாழ்த்துக்கள் அண்ணா…

  31. //இதென்ன கலயாண வருஷமா? முதல்ல பிரகாஷ்! அடுத்தது நீங்க! எப்ப லக்கி?!//

    அண்ணனுக்கே இப்போதானே நேரம், காலம் வந்திருக்கு.

    இன்னும் பத்து வருஷம் போகட்டும் ரமணன்.

    டாக்டர் புரூனோ! இதென்ன திடீர் சிரிப்பூ? 🙂

  32. //டாக்டர் புரூனோ! இதென்ன திடீர் சிரிப்பூ? :)//

    அண்ணா, இது அறியாவினா அல்ல அறிவினா தானே

  33. வாழ்த்து சொன்ன அத்துனை நண்பர்களுக்கும்.. நன்றிகள் பல!

  34. 1.

    //அவரோடு இருந்து எந்த சீன் படங்களும் பார்ப்பதில்லை என்பதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனாலும்.. எனக்கு ஆவாததை நான் எப்படி செய்ய முடியும்.//

    2.

    //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//

    ?????????????????????????????????????????????????????????

  35. பூர்ணா Avatar
    பூர்ணா

    தலை, இதைப் படிக்காம விட்டுட்டேனே…

    //இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.//
    – அந்த ஒருவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :)..

    //சந்தோசம் தான் இருந்தாலும் இனிமேல் உங்களோட டீ கடையில உக்காந்து மணிக்கணக்கா பேச முடியாது, ஒரே நேரத்துல ஒரு பாக்கெட் சிகரெட்டை (அடிக்காதேன்னு சொல்லிகிட்டே) வரலாறையும் அரசியலையும் பேச முடியாதுன்னு நெனைச்சா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. //
    சரவணன் சொன்னதை நானும்..

  36. திருமணம் செய்துகொண்டு, மகிழ்ச்சிகரமாக வாழ வாழ்த்துகள். – பி.கே. சிவகுமார்

  37. /*ஆம் நண்பர்களே.. இவ்வருட இறுதிக்குள் வாழ்க்கைத் துணை ஒருவரை முடிவு செய்து, வாழ்க்கையில் முக்தியை அடைந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.*/

    யார் அந்த பாவத்திற்குரிய பெண்?! 😉

Leave a Reply to பரிசல்காரன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *