விடுபட்டவை 21.01.09

உங்களை கை பிடித்து நடை பழக்கிய அப்பா வீட்டில் நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவர் ஏதாவது விபத்தில் கையோ காலோ சிதைந்து போய் ரத்த சகதியில் கிடப்பதாக கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மீது அன்பை பொழிந்த உங்கள் தாய் வீட்டில் ஓய்வாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரும் ஏதாவது பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ரத்தம் சொட்ட சொட்ட சினிமா நாயகிபோல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து உங்களை நோக்கி வருவதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.

உங்கள் சகோதரர் விளையாடிக்கொண்டோ படித்துக்கொண்டோ நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரின் ஆசனதுவாரத்தில் பழுக்க காய்ச்சிய கம்பியை உள் நுழைத்தெடுத்து குப்பற படுத்துக்கிடப்பதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.

உங்கள் சகோதரி நோட்டிலோ வீட்டு வாசலிலோ கோலம் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரை எட்டுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாய் சேர்ந்து புணர்த்த பின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றியோ கூர்மையான ஆயுதம் கொண்டோ தாக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சினிமா நாயகிபோல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து உங்களை நோக்கி வருவதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.

இப்படி இன்னும் வரிசையாக எழுதிக்கொண்டு போக முடியும். இவற்றை கற்பனை செய்து பார்த்தால் உங்களால் மகிழ முடிகிறதென்றால் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை நண்பர்களே! இப்படியான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் எம் ஈழத்து சொந்தங்கள். தயவு செய்து மேற்சொன்னவற்றை உங்கள் குடும்ப உறவுகளோடு தொடர்பு படுத்தி பலரிடம் பேசி சிரித்து பகிர முடிகின்ற கற்பனையாக உங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை எனில் ஈழத்து மக்களுக்கு எதிராக பேசுவதையும் கைவிடுங்கள்.

நேற்றைய தினமணி நாளிதழில் தலையங்க பக்கத்தில் அய்யா பழ. நெடுமாறன் எழுதிய கடிதம் நிச்சயம் சிந்திக்கக்கூடியதாக இருந்தது. அதனை ஒருங்குறிக்கு மாற்றி வலையேற்றி இருக்கிறேன். நீங்களும் படித்துப் பாருங்கள். இந்த சுட்டியின் மேல் கிளிக் செய்து படிக்கலாம் அல்லது ரைட் கிளிக் செய்து SAVE AS மூலம் சேமித்தும் படிக்கலாம்.

ஈழம் குறித்தான நேரடியான  கேள்விக்கு ’ தமிழக காங்கிரஸார் போல வழ வழ கொழ கொழ ’ என்று தலாய்லாமா பதில் சொல்லியதாக அறிந்தேன். என்னால் போக முடியவில்லை. கேள்விகளோடு என் அலுவலகத்தில் வேறு ஒருவர் போய்விட்டு வந்து நொந்தபடியே மேற்கண்ட கமெண்டை அடித்தார்.

ஈழத்து மக்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள் அதிகரித்துள்ளது. லயோலா கல்லூரி தொடங்கி தமிழகத்தில் பல கல்லூரிகளில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தினார்கள் இன்று. இத்தனை போராட்டங்களுக்கு பின்னரும் மத்திய அரசு அசையாமல் இருப்பது கேவலமான விசயம் எனில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் சரத் பொன்சேகாவை பாராட்டி பேசியிருப்பதை நினைத்தால் பற்றிக்கொண்டு வருகிறது.

கே.வி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒருநாள் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஈழத்தில் கொல்லப்படும் தமிழனுக்கு நீதி கேட்டு அல்ல.. தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து. அட போங்கப்பா ஏதாவது கெட்டவார்த்தையை எழுதிவிடப் போகிறேன்.


Comments

14 responses to “விடுபட்டவை 21.01.09”

  1. அகத்தியன் Avatar
    அகத்தியன்

    கே.வி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒருநாள் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஈழத்தில் கொல்லப்படும் தமிழனுக்கு நீதி கேட்டு அல்ல.. தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து. அட போங்கப்பா ஏதாவது கெட்டவார்த்தையை எழுதிவிடப் போகிறேன்

    ஈழதமிழனுக்கு நீதி வேண்டுமானால் ஒருவரின் சாவில் மட்டுமே நடக்கும். இது ஒரு கசப்பாண உண்மை. இது அனைவருக்கும் தெரியும் ஆனால் அனைவருமோ சப்பை காரணங்களை தேடி அலைகிறோம்.

  2. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    ஆகா! தல சீரியசா பேசுது! நான் ஒத்துக்கறேன் தல! சரி நேத்து விடுபட்டவைக்கு போறேன்!

  3. சொல்ல ஒன்னும் இல்ல தல 🙁

  4. செந்தழல் ரவி Avatar
    செந்தழல் ரவி

    :((((((((((((((((((((((((

  5. என் மன வலியை பதிவு செய்வதற்காக எழுதியிருக்கும் இவ்விடுகையில் தனி நபர் தாக்குதல்களோடு வரும் எந்த பின்னூட்டத்தையும் கண்டிப்பாக வெளியிட முடியாது.

  6. அடப்பாவிங்களா இந்த பதிவுக்கு கூட மைனஸ் குத்தா…

    ங்கொய்யால………

  7. நான் ஒரு பிளஸ் குத்து குத்திட்டேன்

  8. ஆரம்ப வரிகளின் அடர்த்தியில் இருந்து வெளிவரமுடியவில்லை தல.. மிக ஆழ்ந்த பதிவு.வலி!

  9. :(((( எம்மக்கள் அங்கே செத்துக் கொண்டிருக்க இன்றைக்கு ‘ராஜீவை அவமதித்து பேசிய’ திருமாவை கண்டித்து கருப்பு உடையில் வர போறாங்களாம் காங். இவனுங்களை எல்லாம் வெட்டி முண்டமா அலையவிட்ட என்வென்று தோணுது.

    மாணவர்கள் களமிறங்கிருப்பது நல்ல விசயம் இது நல்ல திசையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

  10. நாமக்கல் சிபி Avatar
    நாமக்கல் சிபி

    :((

Leave a Reply to தமிழன்-கறுப்பி… Cancel reply

Your email address will not be published. Required fields are marked *