பக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை.

வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான்.

கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக சுத்தாமல். பையன் இடமிருந்து வலமாக சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான்.

இவனது கோக்குமாக்கை பார்த்தவர் அவனை தடுத்து நிறுத்தி.. ’ஏண்டா இப்படி தலைகீழா சுத்தீண்டிருக்க?ன்னு கேட்டிருக்கார்.

அவனோ, ”என்னோட பாட்டி அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க… நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதல சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்”னு சொல்லி இருக்கான்.

:))))

—-

ஒரு நாள் அந்த பையனை அவன் அப்பா போட்டு அடித்துக் கொண்டிருந்தார். குறுக்கே புகுந்து ’சின்னப்பையனை ஏன் சார் இப்படி அடிக்கிறீங்க?’ன்னு தடுத்து கேட்டேன்.

”இவன் பண்ண காரியத்துக்கு கொஞ்ச வா முடியும்”னு கேட்டார்.

அப்படி என்ன தான் செஞ்சுட்டான்னு கேட்டேன். அவரு அருகில் இருந்த ஒரு வாளியை காட்டினார். அதில் முக்கால் வாளி தண்ணீர் இருந்தது. சோப்பு நுரை நங்கு பொங்கி இருந்தது. சரி.. பையன் சோப்பை தண்ணியில போட்டுட்டான் போலன்னு நினைச்சு.. சின்ன பையன் தெரியாம சோப்பை போட்டிருப்பான் சார்ன்னு சொன்னேன்.

அதுக்கு அவரு, ”அட நீங்க வேற.. தெரிஞ்சு தான் போட்டிருக்கான். தெருவுல சுத்துற.. குட்டி நாய் மெலிஞ்சு இருக்கே ஏன்னு நேத்திக்கு கேட்டான்.. வீக்கா இருக்குறதுனால அப்படி இருக்குன்னு சொன்னேன். இப்ப என்னடான்னா… குளிக்கிறதுக்கு வச்சிருந்த ’டேவ்’ சோப்பை வாளி தண்ணியில கரைச்சு வச்சு.. நாயை குடி குடின்னு கட்டாயப்படுத்திகிட்டு இருந்தான். ஏண்டா இப்படி பண்ணுனன்னு கேட்டா… அந்த சோப்புல தான்.. பாலும், பாதாமும் கலந்து இருக்குறதா.. டீவியில காட்டுனாங்களே.. அதனால தான் கரைச்சு நாய்க்கு கொடுத்தேன். ஆனா குடிக்க மாட்டேங்குதுன்னு சொல்லி ஒரே அடம். அடிக்காம என்ன பண்றது சொல்லுங்க”ன்னு என்னை பார்த்து கேட்டார்.

ஞே!!

—–

பக்கத்து வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த ஆட்டோ. அதில் இருந்து இறங்கும் போதே அந்த பையனை திட்டிக்கொண்டே இறங்கினார் அவன் அப்பா. என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் ஓடி வந்து ஒட்டிக்கொண்டான் அவன். எப்போதும் அவனை காப்பாற்றும் அம்மாவின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சரி.. பையன் பெரிய அளவுல ஏதோ சேட்டை பண்ணிட்டான் போல.. வீட்டுக்குள் போனதும் அடிபின்னப்போறாய்ங்கன்னு பயந்துகிட்டே, ’பையன் நம்ம வீட்டுலேயே கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமே’ன்னு சொன்னேன். “ஆமா.. இவன் செஞ்ச வேலைக்கு விளையாட்டு ஒன்னு தான் கொற..வாடா..”ன்னு அவனை நோக்கி கை நீட்டினார். பையன் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

”அட.. விடுங்க சார்.. என்ன பண்ணீட்டான்னு இப்படி கோவப்படுறீங்க?”

“பக்கத்துல இருக்குற சர்ச்ல இன்னிக்கு ஒரு பங்ஷன். பிரண்டு கூப்பிட்டார்னு குடும்பத்தோட போய் இருந்தோம். பாதர் பைபிள் படிச்சுகிட்டு இருந்தார். அவங்க எல்லாரும் ஜெபம் பண்ணினாங்க.. அப்போ பார்த்து இவன் திடீனு எழுந்திருச்சி ஜம்ப்..ஜம்ப்ன்னு சத்தம் போட்டுகிட்டே குதிக்க ஆரம்பிச்சுட்டான். எல்லோரும் என்னைய ஒரு மாதிரியா பார்க்க.. அவமானமா போச்சு. அதான் உடனே கிளம்பி வந்துட்டோம்” என்றார். வழி நெடுக ஆட்டோவில் வைத்து பையனுக்கு செம அர்ச்சனை. ஆனால் பையன் வாயை திறக்கவே இல்லை என்ற கோபம் வேறு அவருக்கு.

பையனை தடவிக்கொடுத்துக்கொண்டே அவனிடம் காரணம் கேட்டேன். “ க்ளாஸ்ல தூக்கம் வந்தா வாத்தியார் எல்லோரையும் ஜம்ப் பண்ணச்சொல்லுவாரு. அது மாதிரி எனக்கு சர்ச்ல போனதும் தூக்கம் தூக்கமா வந்துச்சு.. தீடீர்ன்னு கண்ணை முழிச்சு பாத்தா.. எல்லோரும் குதிப்போமாகன்னு சொன்னாரா… நான் ஜம்ப் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.” என்றான் பாவமாக.

”இதுக்கு தான் குதிச்சியா..டேய்.. அவரு ஜெபிப்போமாகன்னு தாண்டா சொன்னாரு..” என்று பல்லை கடித்துக்கொண்டு அவனது அப்பா வரவும் இவன் என் பிடியிலிருந்து நழுவி தெருவில் ஓடத்தொடங்கினான்.

—-


Comments

13 responses to “பக்கத்து வீட்டு ரவுசு…”

  1. முதல் ரெண்டு பஸ்ஸுல லைக்குன ஞாபகம் இருக்குது.. மூணாவது இப்பத்தான் படிக்கறேன்..

  2. செம ரவுசு தான்!

  3. அற்புதம்.

    குறிப்பாக அந்த கோவில் வலம் வரும் மேட்டர். நானும் சிறு வயதில் இப்படி ஒரு முறை செய்திருக்கிறேன் (வேண்டுமென்றே).

  4. ஆமா சென்ஷி.. அது பஸ்ஸூல எழுதினது தான். சேமிப்புக்காக இங்கே! 🙂

    ஆமா வாலு… பெரிய ரவுசு தான். வருகைக்கு நன்றி!

    விஸ்வா :)))

  5. அவர் துதிப்போமாக’ன்னு சொல்லியிருப்பாரோ?

    எப்படியோ பையன்…..வால் பையன்…

  6. ரெட்டை வால் ரங்குடு:-)))))

  7. சிரிச்சி சிரிச்சி ஐல இருந்து ஒரே வாட்டர்.

  8. //அவனோ, ”என்னோட பாட்டி அனுமாரை தினம் பதினோரு சுத்து சுத்தச்சொன்னாங்க… நான் ஏதோ நியாபகத்துல அதிகமா சுத்திட்டேன். அதனால.. கூடுதல சுத்துனதை இப்போ எடுத்துகிட்டு இருக்கேன்”னு சொல்லி இருக்கான்.///
    செம காமெடிங்க.. மற்றவையும் அந்த நாய்க்கு சோப்புத்தண்ணி ஊத்துறது எல்லாமே அருமை ..

  9. ஹஹஹ.. தல உங்க புள்ளைய நெனைச்சேன்.. நாளைக்கு நீங்க என்ன பாடு பட போறிங்களோ?

  10. ராஜா Avatar
    ராஜா

    superb

  11. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    பாலா, உண்மையைச் சொல்லுங்க.. அந்தப் பக்கத்து வீட்டுப் பையன்ங்கிற காரக்டர் சின்ன வயசு பாலபாரதி தானே?

  12. […] பக்கத்துவீட்டு ரவுசு முதல் பாகம் இங்… AKPC_IDS += "1105,";Popularity: unranked [?] If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed! This entry was posted in Google Buzz, அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, புனைவு and tagged அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, பக்கத்து வீட்டு ரவுசு. Bookmark the permalink. ← தெரிந்ததும்.. தெரியாததும்- தாராவி […]

  13. சிரித்து மாள முடியல.

Leave a Reply to கிரி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *