ஆபாச தலைப்புகள், சுட்டி இழுக்கும் வாசகங்கள் அல்லது சண்டை போடும் படியான வார்த்தைகளை தலைப்பாக வைத்தால் தான்.. பதிவர்கள் படிப்பார்கள். அதனாலேயே அப்படியான பெயர்களை வைப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த கூற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன. ஆனால்.. உள்ளே என்ன இருக்கும் என்று வாசிக்காமல் அறிந்துகொள்ள முடியாத ”விடுபட்டவை” தலைப்புடன் திகதியும், மாதமும் குறிக்கப்பட்ட பதிவுகள் சூடான இடுகையில் வந்தது.. உண்மையில்.. பதிவர்கள் தலைப்புக்களை வைத்து தேடி வருவதில்லை என்பதை காட்டியதாக உணர்கிறேன். தலைப்புக்களில் இல்லை சூட்சமம் என்பது வலைப்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன். என் எண்ணம் தவறானதாகக்கூட இருக்கலாம். சுட்டிக்காட்டுங்கள்!

-OoO-

இடதுசாரிகள் அறிவித்தபடி ஜூன் 7ம் திகதி தமிழகம் முழுவதும் மறியலும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. சென்னையில் எந்த பெரிய தலைகளும் கலந்துகொள்ளவில்லை. இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன், மார்க்ஸிஸ்ட் என்.வரதராஜன், கே.வரதராஜன் போன்ற யாருமே களத்தில் இல்லை. வட்டம், சதுரம், மாவட்டங்களே ஆக்கிரமித்திருந்தார்கள். சென்னை அண்ணாசாலையில் நடத்தப்பட்ட மறியலில் பல சிகப்புச் சட்டை தோழர்கள் குடிபோதையில் இருந்தார்கள் என்று ஒரு மீடியா நண்பர் சொன்னார். நான் கிண்டி ரயில் மறியலை செய்தியாக்கப் போய் இருந்தேன். அங்கேயும் சிலர் ‘கஃப்’ வாசத்துடன் அலைந்ததை பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் கம்யூனிஸ்ட்க்காரர்கள் தான் கொஞ்சமேனும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். பொதுப்பிரச்சனைகளை கையில் எடுக்கும் இவர்களும் குட்டி பூர்ஸுவாக்களாக.. மாறி வருவதை பார்க்கும் போது… ஏனோ.. நந்திகிராம் விவசாயிகளில் சாவு நினைவுக்கு வருகிறது. 🙁

-oOo-

தமிழ்99 ஒட்டிகள் கேட்டு நாமக்கலில் இருந்து மருத்துவர் செந்தில் போன் செய்திருந்தார். 50 ஸ்டிக்கர் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனுபுவதாக சொல்லி இருந்தேன். முகவரியையும் அனுப்பிவைத்தார். நானும் கருப்பு,வெள்ளை வண்ணத்தில் 25+25 என்று பார்சல் செய்து வைத்திருந்தேன். தவறுதலாக… எங்கேயோ வைத்துவிட்டேன். வேறு பார்சல் செய்து அனுப்பலாம் என்றாலும்.. கருப்பு ஸ்டிக்கர் எண்ணிக்கை குறைகிறது. இன்று அண்ணன் மாசியைப் பார்த்து அவரிடம் இருந்து வாங்கி வரவேண்டும். எப்படியும் நாளையேனும் அனுப்பி வைக்க வேண்டும். ஸ்டிக்கர்+கூரியர் செலவுக்கு என அவர் அனுப்பிய பணம் வங்கி கணக்கில் ஏறி என்னை முறைத்துக்கொண்டே இருக்கிறது.

-OoO-

நேற்று அசதியில் வீடு வந்து சேர்ந்தேன். பதிவை எழுதுவதற்கு உட்காரும் போது கரண்ட் கட்! இணையமும் போச்! வெளியே மழை வேறு. துண்டை கட்டிக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினேன். நல்லா.. கொஞ்ச நேரம் நனைந்த பின் கீழே வந்து சேர்ந்தேன். கரண்ட் வரவேயில்லை. அப்படியே படுத்துவிட்டேன். அதனால்.. நேற்றைய பதிவு இன்று வலையேற்றப்படுகிறது.

-oOo-

இன்று பாஸ்டன் பாலா சென்னைக்கு வந்துவிட்டார். தொலைபேசியில் வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டார். அப்படியே சந்திப்பையும்! அனேகமாக புதுமாப்பிள்ளை சுகுணாதிவாகர் இந்த கூட்டத்திற்கு வருவான் என்று எதிர்பார்க்கிறேன். மொக்கை சந்திப்பு என்று இருந்தாலும்.. பாபா ஸ்பெசல் என்பதால்.. விவாதங்கள் சூடு பறக்கலாம். கடந்த முறை போல.. ”பாபா” தன் செட் பதிவர்களுடன் மட்டும் தனி ஆவர்த்தனம் பண்ணாமல்.. எல்லோரிடமும் மொக்கை போட பொது வேண்டுகோள் வைக்கிறேன்.

குடிமக்கள்.. பார்ட்டி என்று பாதியில் எஸ்கேப் ஆகிவிடாமலும் இருக்கவும் வேண்டுகிறேன். 🙂

-oOo-

மன ஓசை பதிவுகள் மூலம் நமக்கு அறிமுகமான அக்கா சந்திரவதனா வின் சிறுகதை தொகுப்பு மனஓசை ”இவை வெறும் கதைகள் அல்ல.. என்னைச் சுற்றியுள்ள யதார்த்தங்கள்” என்று சந்திரவதனா தன்னுரையில் குறிப்பிடுகிறார். முப்பது கதைகள் சொண்ட இந்நூலில் பல கதைகளின் களம் எனக்கு புதியவை. நீங்களும் வாசித்துப் பாருங்கள். இங்கேயும் க்ளிக் செய்யலாம். நன்றி: நூலகம் டாட் நெட்


Comments

5 responses to “விடுபட்டவை 07 ஜூன் 2008”

  1. \\தலைப்புக்களில் இல்லை சூட்சமம் என்பது வலைப்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன்\\

    தலைப்பும் சிலசமயம் அவசியமே

  2. தூயா Avatar
    தூயா

    //வெளியே மழை வேறு. //

    அங்குமா??

    //துண்டை கட்டிக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினேன். //

    நீங்களுமா?

    //நல்லா.. கொஞ்ச நேரம் நனைந்த பின் கீழே வந்து சேர்ந்தேன். கரண்ட் வரவேயில்லை. அப்படியே படுத்துவிட்டேன்.//

    அப்படியேவா? ஜுரம் வருமே!!

    எச்சரிக்கை: மறுபடி நினைவு படுத்துறேன்..நான் வரும்போதும் வலைப்பதிவர் மாநாடு (சந்திப்பு அல்ல) நீங்க நடத்தலேன்னா…அவ்வளவு தான்…நானே சமைச்சு போட்டு பழிவாங்கிடுவேன்..

  3. \\Let see about your point\\

    இதைத்தான் சொல்ல வந்தேன் அதுக்கள்ளேவா? சரியான பதில் இளா

  4. மேட்டரே இல்லாம தலைப்புனாலயே பல பதிவுகள் இன்னும்

    சூடான இடுகைல வந்துட்டுதான் இருக்கு

    அதுல விடுபட்டவைதான் உங்க விடுபட்டவை