Author: admin

  • 12. பதவிகளை தூக்கி எறிந்த ஈ.வெ.ராமசாமி

    வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.…

  • வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

    இனிய நண்பர்களே, தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம். மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக்…

  • Beautiful Places at Night… அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…

    மும்பை ~~~ டெல்லி (தில்லி) ~~~ பெங்களூரு.. ~~~ மைசூர்.. ~~~ தமிழ்நாடு எங்கள் வாழ்வும்.. எங்கள் வளமும்… 🙂

  • விடுபட்டவை 09.10.08

    பொது இடங்களில் புகைப்பது குறித்து அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தம் குறித்து பல்வேறு கருத்துக்கள்.. பேசப்பட்டு வருகிறது. வலை உலகில் கூட பலரும் இது பற்றி பேசி விட்டார்கள். இதில் எனது கருத்து ஒன்றுதான்.(சிலர் பதிவில் பின்னூட்டமாகக்கூட போட்டு விட்டேன்) பொது இடங்கள் தொடங்கி, சாலையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறுநீர் கழிவறை போல ( அதுவே ஒழுங்க இல்லைன்னு யாரும் சொல்லக்கூடாது) புகைப்பவர்களுக்குமான தனி இடத்தை அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.அரசு/தனியார் என அனைத்து அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு தனி இடம்…

  • விடுபட்டவை 05.10.08

    சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக கைதட்டல் குழந்தைகளிடமிருந்து கலாமுக்கு கிடைத்தது. வழமைபோல கலாம் மேடையில் உறையாற்றும் போது குழந்தைகளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்சொன்னார். அது பெண் குழந்தைகளுக்கான பள்ளி என்பதால்.. உறுதிமொழியில்…

  • விடுபட்டவை 29.09.08

    கொஞ்ச நாளாக முன்னை மாதிரி வலைப்பதிவுகள் பக்கம் தலைகாட்டவோ எழுதவோ முடிவதில்லை. நிறைய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருப்பது தமிழ்மணத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது. இதில் இன்னொன்றும் முக்கியமானதாக படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையிலும் //இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் 🙂 உங்களுக்கு விருப்பம்…

  • 11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி

    வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார். ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல்…

  • விடுபட்டவை 17 செப் 08

    இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள் தொடரலாம்!! -=000=- அரசு இயந்திரம் தாமதமாக செயல்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்..…

  • ஒரு முக்கிய அறிவிப்பு

    நண்பர்களே! வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது. ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும்…

  • அவன் – அது = அவள்! – அவசியம் வாங்க!!

    வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்! நூல் வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு நூலினை பெற்றுக்கொள்பவர் : தோழி ரேவதி, திருநங்கை வாழ்த்துரை : தோழர் ஆதவன் தீட்சண்யா தோழர் பாட்டாளி ஏற்புரை : அடியேன் நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,…