Author: admin

  • விடுபட்டவை 09-ஆகஸ்ட்-08

    சின்னத்திரை மற்றும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. 22 சின்னத்திரை விருதுகள். 36 சினிமா தேர்வாகி இருந்தது, தரமான படம் என்று. இதை தேர்வு செய்தவர்கள்.. இரு நீதிபதிகள் என்பது காமெடி. அதில் கலைஞர் வசனம் எழுதிய படங்களும் அடக்கம். அதை விட சோகம்.. சில கிளு கிளு படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது தான். அதில் ஒரு படத்தின் பெயர்.. சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு! (பா.à®®.க-வின்…

  • இந்த கவிதைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்..

    சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு எழுதிய குறுங்கவிதை இது. ஒரு துளி…

  • விடுபட்டவை 31 ஜூலை 08

    சரியோ, தப்போ.. எனக்கு தெரிந்தவற்றை, தேடி சேகரித்தவைகளை கதை போல சொல்ல முயன்று இருக்கிறேன். தோழமை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் என் நெடுங்கதை நூலின் பெயர் “அவன் -அது = அவள்”. திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் அவல நிலையை எழுத்தில் கொண்டு வர முயன்று இருக்கிறேன். சென்னையில் பிரபலமான அனேக கடைகளில் கிடைக்கிறது. ஆன் லைன் வியாபாரத்திற்கு எனி- இந்தியன் தளத்தினை நம்பி இருந்தது பயன் தரவில்லை. அவர்கள் கைக்கு நூல் கிடைத்து பதினைந்து நாட்களாகியும் அப் டேட் செய்யமுடியாமல் அவதிப்படுகிறார்கள். ஹரனிடம் போனில்…

  • விடுபட்டவை 8 ஜூலை 2008

    சனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன்.  ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்கு எல்லாம் நேரு உள்விளையாட்டரங்கில் வந்துவிடும் படி அறிவுறுத்தப்பட்டு போய் சேர்ந்தேன். கொஞ்சம் கூட்டம் இருந்தது. வாசலிலேயே ஒரு…

  • விடுபட்டவை 2ஜூலை 2008

    கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி இருந்ததால்.. நான் மட்டும் நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினேன். பத்தடி தூரம் போனதும் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இனோவா வண்டி ஒன்று எதன்மீதோ…

  • விடுபட்டவை 28 ஜூன் 2008

    சென்னையில் ஒரு போலீஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு அதிர்ச்சித் தகவலைச்சொன்னார். போக்குவரத்துக்காவலர்கள் அநேக வண்டியை மறித்து, அது இருக்கா, இது இருக்கா என்றெல்லாம் விசாரிக்கிறார்கள். பைன் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்துவார்கள். அதிலும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்காமல் ஓட்டக்கூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். இவர்கள் அப்படியான ஒரு வண்டி கிடைத்துவிட்டால் கொண்டாட்டம் தான். ஆனால் சென்னையில்( தமிழகத்திலும் கூட) ஓடும் எந்த காவல்துறை வண்டிக்கும் இன்சூரன்ஸ் என்பதே இல்லையாம். ஏதாவது ஒரு விபத்து நடந்துவிட்டால்.. பாவம் அந்த…

  • விடுபட்டவை 19 ஜூன் 2008

    மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க முடியும். 🙂 அவ்வளவு பெரிய.. முயற்சியில அடியேனின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை…

  • விடுபட்டவை 15 ஜூன் 2008

    தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது. (நண்பர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதை விட வருத்தமான விசயம்.…

  • விடுபட்டவை 07 ஜூன் 2008

    ஆபாச தலைப்புகள், சுட்டி இழுக்கும் வாசகங்கள் அல்லது சண்டை போடும் படியான வார்த்தைகளை தலைப்பாக வைத்தால் தான்.. பதிவர்கள் படிப்பார்கள். அதனாலேயே அப்படியான பெயர்களை வைப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த கூற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன. ஆனால்.. உள்ளே என்ன இருக்கும் என்று வாசிக்காமல் அறிந்துகொள்ள முடியாத ”விடுபட்டவை” தலைப்புடன் திகதியும், மாதமும்…

  • விடுபட்டவை 06 ஜூன் 2008

    நான் வழக்கமாக சாப்பிடும் கடை நேற்று பூட்டியிருந்தது.(இன்றும் தான்). அதனால்.. வேறு ஒரு கடையில் சாப்பிட்டேன். அது என்னமோ செய்ய.. இரவெல்லாம் ஒரே அவதி! இரவில் எழுத வேண்டிய பதிவை.. இன்று அதிகாலை எழுதி.. நேற்றைய தேதியில் எடிட் பகுதியில் செட் செய்து.. காலையில் போஸ்ட் போட்டு விட்டேன். அதில் எழுதி இருந்த திண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போலவே பலரும் திண்ணை குறித்த ஏக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்…