விடுபட்டவை 05 ஜூன் 2008

எப்போதுமே என் மீது எனக்கு மீது பரிதாப உணர்ச்சியும், கழிவிரக்கமும் உண்டு. அதே அளவுக்கு என் மீது எனக்கு கோபமும், வருத்தமும் கூட உண்டு. இவை இருப்பதால் தான்.. உள்ளுக்குள் உந்தப்பட்டு மேலே மேலே என்று வர முயன்றுகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் என் அருகில் இருப்பவர்கள் மீது நான் காட்டும் கோபம் கோழிக் காமம் மாதிரி.. வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது.

ஆனால்.. முன்பு எல்லா இடத்திலேயும் சண்டை போடத் தயாராக இருப்பேன். சமூகம் அங்கிகரிக்காத காரியங்களை எவர் செய்தாலும் சர்ரென.. ஏறிவிடும் எனக்குள் கோபம். அடுத்தவர் பிரச்சனைக்காக கோபப்படுவது தான் அடிக்கடி நிகழும். பல சமயங்களில்.. வாக்குவாதமாகத் தொடங்கி, அடிதடி வரை போய் இருக்கிறது. 🙁

சொந்த மண்ணில் இருந்த சமயத்தில் என் கோபங்களைக் கண்ட.. ஒரு பெரியவர் ( என் அப்பாவின் சினேகிதர்- எஸ்.டி.மாணிக்கம்-இவரைப் பற்றி அப்துல்கலாம் அக்னிசிறகில் எழுதி இருப்பார்) என்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அதை இங்கு எல்லோருக்கும் பொதுவில் வைக்க விரும்புகிறேன்.

“கோபப்படுவது என்பது எல்லோருக்கும் எளிதான காரியம்.
ஆனால்..;
சரியான காரணத்திற்காக, சரியான நபர் மீது, சரியான தருணத்தில், சரியான அளவில் கோபப்படுவது என்பது எளிதான காரியமல்ல!”

அனுபவமிக்க பெரியவர்களிடம் நான்(நாம்) கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் இருக்கு..ன்னு அப்போது தான் உணர்ந்துகொண்டேன். அவர் சொல்லிக் கொடுத்த மேற்சொன்ன வார்த்தைகளை தினமும் நினைத்துப் பார்த்துக்கொள்வேன். ஒரே ஒரு விசயம்.. இங்கு என் மன வலிகளை பதிவு செய்துகொள்ளுவது என்பது, எனக்கு மனச்சிதைவு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்கான ஒரு வழி! திருமண ஏக்கத்திற்காக அல்ல! கென் கவனிக்க!! 🙂

-oOo-

போகிற போக்கைப் பார்த்தால்.. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் போல் தெரிகிறது. அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் இடதுசாரிகள், இம்முறை பெட்ரோல் விலை உயர்வால்.. தங்களின் வாங்கு வங்கி-க்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுவதாக நண்பர் ஒருவர் சொன்னார். அப்படி உண்மையில் அவர்கள் பயப்படுவதாக இருந்தால்.. தங்களின் வாக்கு வங்கிகளை காப்பாற்றிக்கொள்ள, தங்களை நியாயமானவர்களாக காட்டிக்கொள்ள.. அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளக்கூடும். எப்படியோ.. நாட்டின் நிதி நிலையை மோசமாக்கியாச்சு.. இனி.. வேணாம் நான் ஏதாவது சொல்லப் போக… வம்பு எதுக்குங்க! ஆளை விடுங்கப்பா!!

-OoO-

திண்ணை. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று என்று சொல்லிக்கொள்ள முடியும். திண்ணை பள்ளிக்கூடம், நாடோடிகளுக்கு ஓய்வறை, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நீதிமன்றம், அரசியல் கட்சியை வளர்த்த கதை கூட திண்ணைகளுக்கு உண்டு. திண்ணை என்றோரு சமாச்சாரம் நம் வீடுகளில் முன்பு இருந்தது. இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளாகி வரும் நம் வசிப்பிடங்களில் திண்ணை என்ற ஒரு அம்சம் இல்லாமல் போய்விட்டது. 🙁

இப்போது நம் கண் முன் அழிந்து விட்ட (அ) அழிந்து வரும் அடையாளத்தினை மீட்டெடுக்க.. எல்லோரும்.. பணியிடம் தொடங்கி.. போகும் இடம், வருமிடம் என எல்லா இடத்திலும் திண்ணை நினைவுகளை பதிவு செய்து கொள்ளலாம். புதியதாக வீடு கட்டுபவர்கள்.. (ப்ளாட் வாங்குபவர்கள் அல்ல) திண்ணை வைத்து கட்டலாம். (அது கம்பௌண்ட் கேட்டுக்குள் இருந்தாலும் கூட!) பதிவர்கள் தம் தம் திண்ணை அனுபவங்களை மீட்டு எடுக்கலாம். சுடர் விளையாட்டு மாதிரி (ஒருவரிடம்) திண்ணை பதிவை சுற்றி வரச்செய்யலாம்.

மொக்கை போடுறதும், சண்டை போடுறதும் தானா.. நம் வேலை? வாங்க.. திண்ணை அனுபவ பகிர்வை.. எழுதத்தொடங்கலாம். ப்ளீஸ் ஆரம்பிக்கப் போகும் ஆட்டத்தில் கடைசியில் என்னையும் விளையாட அனுமதிக்கனும்.

-OoO-

பணிக்கு சேர்ந்தாகிவிட்டது. அலைச்சலும் ஆரம்பமாகிடுச்சு. இது பத்தி எழுதனும், இது பத்தி எழுதனும் என்று தினக்குறிப்புகள் எழுத நினைப்பதை எல்லாம் இரவில் வீட்டுக்கு வந்து எழுத உட்காரும் போது… மறந்து போயிடுது. இன்று முதல்.. அவ்வப்போது பேப்பரில் குறித்து வைத்துக்கொண்டால் தான் எழுத முடியும் போல.. தவிர.. தினக்குறிப்புகள்.. தினமும் எழுத முடியாமல் போய் விடும் சூழலும் ஏற்பட்டு விடலாம். ஆனாலும்.. முயற்சிகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

-oOo-

காவிக்கறை படியும் தென்னிந்தியா சிவக்குமார் என்பவர் எழுதிய சிறு கட்டுரையின் மென்நூல்! வாசித்துப் பாருங்கள்.. சிலருக்கு பிடிக்கலாம். பலருக்கு எரிச்சலைத் தரலாம் இந்த 3 பக்க கட்டுரை!


Comments

27 responses to “விடுபட்டவை 05 ஜூன் 2008”

  1. திண்ணையை ஆரம்பிச்சுர்றோம்

  2. //முரளிகண்ணன் June 6th, 2008 at 7:01 am
    திண்ணையை ஆரம்பிச்சுர்றோம்
    //

    முரளி நீங்களே ஆரம்பிச்சு வைங்க :))

  3. திண்ணை ஐடியா நல்லது.. நானும் எழுதறேன்..

  4. திண்ணை சூப்பர் ஐடியா…

  5. கென் Avatar
    கென்

    தல சொல்லியிருக்க எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாண மேட்டருக்கு மட்டும் பதில் சொல்லிருக்கீங்க

    🙂

    மத்தபடி அப்துல் கலாம் பாராட்டினவங்ககிட்டேயே இதைப்பத்தி பேசுங்க நான் சொல்லி இருக்கிறது தப்புன்னா சொன்னார்னா 95 வயது வரைக்கும் இப்படியே இருங்க

    சந்தோசம்

  6. கென் Avatar
    கென்

    சிகரெட் சாப்பிடரத பத்தியெல்லாம் யாரும் எதும் சொல்றது இல்லையா?

    என்னை மட்டும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்றது எதுக்கு ??

    🙂

  7. விடுபட்டவை தொடர் நல்லா இருக்கு. உங்க மற்ற இடுகைகளை விட இதை எதிர்ப்பார்த்து படிக்கிறேன்.

  8. //பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நீதிமன்றம்,//

    தலை, உங்க காமடி தாங்க முடியல …. அது தீர்வு காண்கிற பிரச்சனைய விட, உருவாக்குற பிரச்சனை அதிகம் ….அப்படியே ‘சாவடி’ பற்றியும் எழுதலாம் …
    சமீபத்தில் 1970 இல் இருந்து இன்று வரை எங்க தாத்தா வீட்டுக்கு ஒரு வேலை சாப்பாட்டிற்கு மட்டுமே செல்வர். மற்ற எல்லா நேரமும் சாவடி தான்.

  9. அண்ணே, ஒரு ஓரத்துல நமக்கும் ஒரு இடம் போட்டு வையுங்க! திண்ணைக்கு வரேன்!

  10. //காவிக்கறை படியும் தென்னிந்தியா சிவக்குமார் என்பவர் எழுதிய சிறு கட்டுரையின் மென்நூல்! வாசித்துப் பாருங்கள்.. சிலருக்கு பிடிக்கலாம். பலருக்கு எரிச்சலைத் தரலாம் இந்த 3 பக்க கட்டுரை!//

    இதுக்கு பேர் தான் உள்குத்து என்பதோ? :P….

  11. அன்பின் பாலபாரதி,

    http://mrishansharif.blogspot.com/2008/06/blog-post.html

    எனது ‘திண்ணை’க் கதை 🙂

  12. தினம் தினம் புதுத் திண்ணை வேணுமுனா எப்படி? அதான் ஏறக்கொறைய ரெண்டரை வருசம் முந்தியே திண்ணைக்கு பறந்துருக்கேனே……..

    அப்ப இருந்த எண்ணத்தை மாத்திக்கும் எண்ணம் இல்லாததால் இதோ அந்தப் பதிவின் சுட்டி.

    http://thulasidhalam.blogspot.com/2006/01/blog-post_06.html

  13. நானும் போட்டுடேன்ங்க திண்ணைக்கதை

  14. என் வீட்டு திண்ணையை எட்டி பார்க்க

    http://athisha.blogspot.com/2008/06/blog-post_6168.html

  15. கயல்விழி அவர்கள் சுட்டிய வழியில் தங்கள் திண்ணையை எட்டிப் பார்க்க வந்தேன். தாங்கள் ஆரம்பித்து வைத்த திண்ணை ஐடியா அற்புதம். திண்ணையைக் கட்டி விட்டுச் சொல்கிறேன்.

  16. திண்ணை அனுபவங்கள்

    http://valai.blogspirit.com/archive/2008/06/16/thinnai.html

  17. சொன்னபடி என் திண்ணையைக் கட்டி விட்டேன். தாமதத்துக்கு மன்னித்து உங்கள் திண்ணை பதிவுகள் சேகரிப்பில் இதற்கும் ஒரு இடம் உண்டா எனக் காண வாருங்கள்.

    http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

  18. அழைப்பே இல்லாமல் நானும் ஆட்டத்தில் சேர்ந்துவிட்டேன்…. ஒவ்வொருவரின் திண்ணை அனுபவமும் சுகமானது…. திண்ணை விளையாட்டை தொடங்கியதற்கு நன்றி…..

  19. பாலபாரதி அவர்களுக்கு,
    நானும் எங்கூட்டு திண்ணையை புதுப்பித்து வழுவழுவென்று
    ரெடி பண்ணிட்டேன். வந்து உக்காந்து களைப்பாற…இளப்பாறலாமே!!சுட்டி கொடுக்க கணினி மறுக்குது. ஆகவே ப்ளாக் பேரைத் தந்திருக்கிறேன்.
    http://www.9-west.blogspot.com

  20. பாலபாரதி அவர்களுக்கு,
    நானும் எங்கூட்டு திண்ணையை புதுப்பித்து வழுவழுவென்று
    ரெடி பண்ணிட்டேன். வந்து உக்காந்து களைப்பாற…இளப்பாறலாமே!!சுட்டி கொடுக்க கணினி மறுக்குது. ஆகவே ப்ளாக் பேரைத் தந்திருக்கிறேன்.
    http://www.9-west.blogspot.com

  21. நடராஜனைத் தொடர்ந்து, எனது பதிவின் தாக்கத்தில் திண்ணை படைத்த நானானியின் உரலையும் இத்துடன் இணைக்கிறேன்.
    http://9-west.blogspot.com/2008/07/blog-post_11.html
    எனது பதிவில் முதல் ஆளாக வந்து இது ஒரு தொடர் பதிவா எனக் கேட்டு தானும் எழுதலாமா என ஆர்வத்துடன் வினவி, திண்ணையைப் ‘புதுப் பொலிவுடன்’ தந்திருக்கிறார்.

  22. என்னோட திண்ணை பதிவு இது பாலபாரதி…

    http://nilavunanban.blogspot.com/2008/07/blog-post_7978.html

  23. http://emuthu-tuticorin.blogspot.com/2008/08/blog-post.html இவர் ஒரு திண்ணைப்பதிவு போட்டிருக்கார்.. திண்ணைகளை சேமிக்கும் இடத்தின் லிங்க் எது . .. அதை மீண்டும் ஒரு முறை பதியுங்களேன்..

  24. பாலபாரதி சார் உங்கள் திண்னை பதிவிற்க்கு என்னுடைய இடுகை

    http://ramya-penningthoughts.blogspot.com/2008/09/blog-post.html

  25. பாலா அண்ணா, எனக்குள் இருக்கும் திண்ணை நினைவுகளை பதித்தாயிற்று. சுட்டி : http://premkumarpec.blogspot.com/2008/09/blog-post_14.html

  26. மறந்து போன சுவாசங்களை திரும்பி பார்க்க வைக்கிற முயற்சி. நன்றி. ராமலக்ஷ்மி அவர்கள் சொன்னதன் பெயரில் இங்கே என்னுடைய திண்ணை நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    என் திண்ணை நினைவுகள்

Leave a Reply to துளசி கோபால் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *