Category: சமூகம்/ சலிப்பு

  • வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

    இனிய நண்பர்களே, தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம். மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக்…

  • Beautiful Places at Night… அழகான இடங்களின் இரவுக் காட்சிகள்…

    மும்பை ~~~ டெல்லி (தில்லி) ~~~ பெங்களூரு.. ~~~ மைசூர்.. ~~~ தமிழ்நாடு எங்கள் வாழ்வும்.. எங்கள் வளமும்… 🙂

  • இந்த கவிதைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்..

    சில ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனையை முன்னிருத்தி திரை உலகினர் நெய்வேலியில் பெரிய பேரணியை நடத்தி, கர்நாடகத்திற்கு எதிரான தங்களின் நிலையை காட்டினார்கள். அப்போது நம்ப சூஊஊஊஊஊஊப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனித்து, உண்ணாவிரதம் இருந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். (இதன் அரசியல் உணராத திரை உலக அறிவுஜீவிகள் நெய்வேலி பங்சன் முடித்து இங்கேயும் வந்து வாழ்த்திவிட்டுப் போனது சோகமான காமெடி) அப்போது மும்பையில் இருந்த நான் ஒரு சிறு பத்திரிக்கைக்கு எழுதிய குறுங்கவிதை இது. ஒரு துளி…

  • விடுபட்டவை 15 ஜூன் 2008

    தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய் விட்டது வருந்தமளிக்கிறது. (நண்பர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதை விட வருத்தமான விசயம்.…

  • விடுபட்டவை 07 ஜூன் 2008

    ஆபாச தலைப்புகள், சுட்டி இழுக்கும் வாசகங்கள் அல்லது சண்டை போடும் படியான வார்த்தைகளை தலைப்பாக வைத்தால் தான்.. பதிவர்கள் படிப்பார்கள். அதனாலேயே அப்படியான பெயர்களை வைப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த கூற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன. ஆனால்.. உள்ளே என்ன இருக்கும் என்று வாசிக்காமல் அறிந்துகொள்ள முடியாத ”விடுபட்டவை” தலைப்புடன் திகதியும், மாதமும்…

  • விடுபட்டவை 06 ஜூன் 2008

    நான் வழக்கமாக சாப்பிடும் கடை நேற்று பூட்டியிருந்தது.(இன்றும் தான்). அதனால்.. வேறு ஒரு கடையில் சாப்பிட்டேன். அது என்னமோ செய்ய.. இரவெல்லாம் ஒரே அவதி! இரவில் எழுத வேண்டிய பதிவை.. இன்று அதிகாலை எழுதி.. நேற்றைய தேதியில் எடிட் பகுதியில் செட் செய்து.. காலையில் போஸ்ட் போட்டு விட்டேன். அதில் எழுதி இருந்த திண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போலவே பலரும் திண்ணை குறித்த ஏக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்…

  • விடுபட்டவை 4 ஜூன் 2008

    புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுவதற்கு முன் மெடிக்கல் செக்கப் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களே ஒரு இடத்தையும் பிக்ஸ் செய்து, ஒரு கடிதத்தை கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு மட்டும் வந்துடுங்க என்றும் சொல்லி விட்டார்கள். அதில் கொடுமை என்னவென்றால்.. வெறும் வயிற்றுடன் காலை 7.30 மணிக்கு ஸ்கேன் செண்டரில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு. தரமணியில் இருந்து அதிகாலையிலேயே எழுந்து தயாராகி, ஒரு வழியாக கடிதத்துடன் ஸ்கேன் செண்டர் போய் சேர்ந்தேன். அங்கே என்னோடு…

  • விடுபட்டவை 31 மே 2008

    சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு இருக்கிறது. என் வீட்டில் எட்டாவது பையனாகிப் போனதால்.. நான் செய்யும் எதுவுமே அவர்களுக்கு புதியதாக படவில்லை. (முன்னோர்களால்.. ஏற்கனவே செய்யப்பட்டவைகளாக அவை இருந்திருக்கும்…

  • விடுபட்டவை 30.மே.2008

    சென்னைக்கு வரும் பதிவர்கள் பலரை சந்திக்கும் விருப்பத்தை தெரிவித்தாலும், அதனை பதிவு நாம் போட்டு அறிவித்தாலும்.. எல்லோரின் கண்ணிலும் அப்பதிவு படுவதில்லை. விளைவு சந்திப்புக்கு முன்பாக எஸ்.எம்.எஸ் வழியாகவோ, தொலைபேசியோ சென்னையில் இருப்பவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பதிவு போட்டால் தானே பார்க்க முடியாமல் போகிறது.. மெயிலாக அனுப்பிவிட்டால்.. என்ற ரோசனையை செயல்படுத்த உடனடியாக(!) ஒரு குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது. Homepage: http://groups.google.com/group/chennaibloggersmeet Group email: chennaibloggersmeet@googlegroups.com இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால்…

  • விடுபட்டவை 28.மே.2008

    சென்னையில் ஆர். எஸ்.எஸ் அலுவலகத்தின் குண்டு வைத்து பலியான தீவைரவாதி ஒருவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தும் அடையாளம் தெரியாததால்.. அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக 28மே 2008 ம் தேதி தினத்தந்தி 11ம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதே தேதியில் வந்திருக்கும் தினகரன் 5ம் பக்கத்தில் அடையாளம் தெரிந்ததால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதே போல.. கால்டாக்ஸி டிரைவர் தனசேகர் என்பவனி காவல்துறை கது செய்திருக்கிறது. அவன்…